ஐபிஎல்லே வேண்டாம்.. மாலத்தீவிற்கு பறந்த வீரர்கள்.. இனி திரும்ப வாய்ப்பே இல்லை.. பரபர சம்பவம்

சென்னை: இந்தியாவில் ஐபிஎல் ஆட வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் மாலத்தீவு செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.

2021 ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து பல வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் போட்டிகள் ஒரு பக்கம் நடத்தப்பட்டு வந்தது.

அந்த 6 நாள் கணக்கு.. ஐபிஎல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பின் சிஎஸ்கே மேட்சும் ஒரு காரணமா? - பின்னணி

இந்த நிலையில் பல்வேறு வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் 2021 ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேதி அறிவிக்கப்படாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல்

ஐபிஎல்

இந்த நிலையில் ஐபிஎல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு வீரர்கள் எல்லோரும் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பும் முடிவில் இருக்கிறார்கள். ஒவ்வொரு வீரர்களாக எப்படியாவது தங்கள் சொந்த நாட்டிற்குள் செல்லும் திட்டத்தில் உள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மே 15 வரை இந்த விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறுவது சிக்கலாகி உள்ளது.

எங்கே

எங்கே

இதையடுத்து மற்ற நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து விமானத்தில் சென்றுவிட்டு, பின் அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்லும் முடிவில் இருக்கிறார்கள். அதன்படி தற்போது பல ஆஸ்திரேலியா வீரர்கள் மாலத்தீவு செல்லும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. ஆஸி வீரர்கள், கோச்கள் எல்லோரும் மாலத்தீவிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

பயணம்

பயணம்

இதற்காக இவர்கள் டிக்கெட்டுகளை புக் செய்துள்ளனர். பின்னர் அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு, பின்னர் ஆஸ்திரேலியா செல்லும் முடிவில் உள்ளனர். மற்ற வெளிநாட்டு வீரர்களும் அடுத்த 2 நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Australian players will leave to the Maldives after the series suspension.
Story first published: Tuesday, May 4, 2021, 17:38 [IST]
Other articles published on May 4, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X