For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டாட்டா பைபை.. இனிமே நாங்களே பார்த்துக்குறோம்.. கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு.. பிசிசிஐ அதிரடி!

மும்பை : 2021 ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் பிசிசிஐ அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரை நடத்த உதவி வந்த ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமான ஐஎம்ஜிக்கு "டாட்டா பைபை" கூறி உள்ளது பிசிசிஐ.

ஐபிஎல் துவங்கியது முதல் அதை பிரம்மாண்டமான பிராண்ட்டாக உருவாக்க உதவி வந்தது ஐஎம்ஜி நிறுவனம்.

லலித் மோடி

லலித் மோடி

2007-08இல் லலித் மோடி ஐபிஎல்- தொடரை உருவாக்கிய போது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஐஎம்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். அப்போது ஆண்டுக்கு 27 கோடி என்ற அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது அளவுக்கு அதிகமான தொகை என துவக்கம் முதல் சர்ச்சை நிலவி வந்தது.

12 கோடி

12 கோடி

2009இல் லலித் மோடியால் 33 கோடிக்கு ஒப்பந்தம் உயர்த்தப்பட்டு, பின் 28 கோடியாக குறைக்கப்பட்டது. முதலில் போடப்பட்ட பத்தாண்டு ஒப்பந்தம் 2017இல் முடிவுக்கு வந்த போது ஆண்டுக்கு கூடுதலாக 12 கோடி பெற்றது ஐஎம்ஜி.

பணி விலகல்

பணி விலகல்

ஆனால், இதே காலகட்டத்தில் அந்த நிறுவனத்தில் பிசிசிஐயுடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் பலர் வேறு பணிகளுக்கு சென்று விட்டனர். அந்த நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் கேத்தரின் சிம்ப்சன் கடந்த மாதம் ஐபிஎல் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவி விலகினார்.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

இந்த நிலையில், இனியும் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்த பிசிசிஐ, கடந்த நான்கு நாட்கள் முன்பு அந்த ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக கூறி இருக்கிறது. இனி ஐஎம்ஜி நிறுவனத்துக்கு பதில் அதிகாரிகளை நேரடியாக நியமித்து ஐபிஎல் தொடரை நடத்த உள்ளது பிசிசிஐ.

Story first published: Friday, January 8, 2021, 19:30 [IST]
Other articles published on Jan 8, 2021
English summary
IPL 2021 : BCCI ended relationship with IMG after 13 years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X