For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரூ.100 கோடி தரணும்..நஷ்டம் அடைந்ததாக கூறி மழுப்பும் பிசிசிஐ..பாய்ண்ட் போட்டு விளாசிய முன்னாள் வீரர்

மும்பை: பிரபலங்கள் பலர் கொரோனா நிவாரணம் வழங்கி வரும் நிலையில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் கவுன்சில்கள் ஏன் நிவராணம் வழங்கவில்லை என்ற கேள்விகள் அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 2 மாதங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

45 நிமிடம்.. அப்படியே கதிகலங்கிய சிஎஸ்கே.. தோனி தந்த அட்வைஸ்.. வெற்றிக்கு பின் இருக்கும் 5 காரணங்கள்45 நிமிடம்.. அப்படியே கதிகலங்கிய சிஎஸ்கே.. தோனி தந்த அட்வைஸ்.. வெற்றிக்கு பின் இருக்கும் 5 காரணங்கள்

இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. எனினும் அங்கும் கொரோனா பரவியதால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிதியுதவி

நிதியுதவி

இந்தியாவின் கொரோனா பாதிப்பை பார்த்த கிரிக்கெட் பிரபலங்கள் பலர் அதற்காக நிதியுதவி செய்தனர். ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மிங்ஸ் கொரோனா நிவாரணமாக ரூ.37 லட்சம் கொடுத்து தொடங்கிவைத்தார். அதன் பின்னர் ராஜஸ்தான் அணி, பஞ்சாப் கிங்ஸ், ஷிகர் தவான், நிகோலஸ் பூரண், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்காக நிதியுதவி செய்தனர்,

 கொடுத்தே ஆக வேண்டும்

கொடுத்தே ஆக வேண்டும்

இந்நிலையில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் கவுன்சில் கொரோனா நிவாரணமாக ரூ.100 கோடியாவது கொடுத்தே ஆக வேண்டும் என முன்னாள் வீரர் சுரிந்தர் கண்ணா தெரிவித்துள்ளார். ஆனால் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டதால் பிசிசிஐ-யே சுமார் ரூ.2200 கோடி வரை நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நஷ்டம் இல்லை

நஷ்டம் இல்லை

இதனை குறிப்பிட்டு பேசிய சுரிந்தர் கண்ணா, ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டதால் பிசிசிஐ-ன் லாபம் தான் குறைந்துள்ளது. நஷ்டம் ஏற்படவில்லை. ஒரு வேளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் Force Majeure Clause இன்சூரன்ஸ் ( பேரழிவுகளின் போது தொடர்கள் பாதிக்கப்பட்டால் பிசிசிஐ பணத்தை திருப்பி தர தேவையில்லை) போடப்பட்டிருந்தால் லாபமும் குறையப்போவதில்லை.

 சுரிந்தர் கோரிக்கை

சுரிந்தர் கோரிக்கை

இந்த காரணத்தால் கவுன்சிலிடம் போதிய பணம் இருக்கும். எனவே நாட்டில் நிலவும் பேரழிவை கருத்திற்கொண்டு, சமூக அக்கறையுடன் பிசிசிஐ நிதியுதவி செய்தே ஆக வேண்டும் என சுரிந்தர் கண்ணா தெரிவித்துள்ளார். சரிந்தர் கண்ணாவும் ஐபிஎல் கவுன்சிலும் முன்னாள் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி

கேள்வி

தொடர்ந்து பேசிய அவர், ஐபிஎல் தொடர் முன்கூட்டியே நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. அணி உரிமையாளர்களும் இதுகுறித்து எந்த அக்கரையும் காட்டவில்லை. அவர்களுக்கு லாபம் கம்மியாகிறது என்றுதான் வருத்தப்பட்டார்களா?, மனிதர்களின் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்பதை உணரவில்லையா? என சரமாரியாக கேள்விக்கேட்டுள்ளார்.

Story first published: Wednesday, May 5, 2021, 21:51 [IST]
Other articles published on May 5, 2021
English summary
'BCCI Should Donate Rs.100 Crore' Says Former Cricketer Surinder Khanna
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X