For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த 2 விஷயம் தான் பண்ண முடியும்.. ஆஸ்திரேலிய வீரர்களுக்காக பிசிசிஐ- முயற்சிகள்..தொடரும் சிக்கல்!

ஆஸ்திரேலியா: ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களை சொந்த நாட்டிற்கு அனுப்ப பிசிசிஐ எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

வீரர்களுக்குள் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்... சூப்பர் ஓபனிங் செஞ்சுருக்காரு ஹிட்மேன்... மிகச்சிறப்பு! சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்... சூப்பர் ஓபனிங் செஞ்சுருக்காரு ஹிட்மேன்... மிகச்சிறப்பு!

இந்த தொடரில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் தற்போது சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் கவலையில் உள்ளனர்.

 விமானம் ரத்து

விமானம் ரத்து

கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு வரும் மே 15ம் தேதி வரை ஆஸ்திரேலிய அரசு தடைவிதித்துள்ளது. ஐபிஎல்-காக சென்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் மே15 வரை நாட்டில் நுழைய அனுமதி கிடையாது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

கவலை

கவலை

ஐபிஎல் தொடரில் ஏற்கனவே ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ரே டை உள்ளிட்டோர் ஆஸ்திரேலிய சென்றுவிட்ட நிலையில், ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்கள், வர்ணனையாளர்கள், பயிற்சியாளர், ஊழியர்கள் என 40 ஆஸ்திரேலியர்கள் ஐபிஎல்-ல் சிக்கியுள்ளனர். இவர்கள் தற்போதைக்கு மாலத்தீவு, இலங்கைக்கு சென்று, அங்கிருந்து தாய் நாட்டிற்கு திரும்ப திட்டமிட்டு வருகின்றனர்.

நடவடிக்கை

நடவடிக்கை

இந்நிலையில் அவர்கள் நாடு திரும்புவது குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரி, நிக் ஹாக்லே, ஆஸ்திரேலிய வீரர்களை அழைத்து வருவதற்கு 2 விஷயங்களை செய்ய வேண்டும். முதலில் இந்தியாவில் இருந்து வெளியேற்றி இலங்கை, மாலத்தீவு ஆகிய இடங்களில் தங்கவைக்க பிசிசிஐ ஏற்பாடு செய்துவருகிறது. அங்கு அவர்கள் சிறிது நாட்கள் காத்திருப்பார்கள். அதே போல வேறு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா எனவும் பார்த்து வருகிறது.

 காத்திருப்பு

காத்திருப்பு

2வது விஷயமாக வீரர்களை தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கவும் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மே 15ம் தேதிக்கு பிறகு ஆஸ்திரேலிய அரசு என்ன முடிவெடுக்க போகிறது என்பதற்காக காத்துள்ளோம். அனுமதி கிடைத்துவிட்டால் உடனடியாக வீரர்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்துவிடுவோம் என தெரிவித்தார்.

Story first published: Wednesday, May 5, 2021, 18:34 [IST]
Other articles published on May 5, 2021
English summary
BCCI to help arrange charter flight for IPL's Australian players says CA
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X