For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவ்ளோ காசு போச்சா. ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டதால் கவலையில் பிசிசிஐ.. தொகையை கேட்டால் அதிர்ச்சிதான்!

மும்பை: ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பிசிசிஐக்கு ஏற்படவிருக்கும் நஷ்டத்தின் மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

Recommended Video

IPL 2021 ஒத்திவைத்ததின் பின்னணி.. பல்டி அடித்த BCCI | OneIndia Tamil

வீரர்களுக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2021 தொடரை கண்டிப்பா நடத்ததான் போறோம்... ஆனா எப்போன்னு சொல்லமுடியாது -பிரிஜேஷ் ஐபிஎல் 2021 தொடரை கண்டிப்பா நடத்ததான் போறோம்... ஆனா எப்போன்னு சொல்லமுடியாது -பிரிஜேஷ்

வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு ஒருபக்கம் இருந்தாலும், பிசிசிஐக்கு இதனால் பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

நேற்று முன் தினம் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அமித் மிஸ்ரா, சஹா உள்ளிட்ட வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு ரூ.2000 முதல் 2500 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

இதில் அதிகப்படியாக தொலைக்காட்சி ஒளிபரப்பை செய்வதில் வந்துள்ளது. ஐபிஎல் தொடரை ஒளிபரப்பு செய்ய ஸ்டார் ஸ்போர்ஸ்ட் நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ரூ.16,347 கோடி ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி ஆண்டு ஒன்றுக்கு ரூ.3,269.4 கோடி ஆகும். ஒரு ஆட்டத்திற்கு ரூ.54.5 கோடி ஆகும். அதன்படி பார்த்தால் இந்தாண்டு மொத்த 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. மீதம் 31 போட்டிகள் உள்ளன. எனவே இதன் மூலம் மட்டும் ரூ.1690 கோடி பிசிசிஐ -க்கு நஷ்டம் ஏற்படவுள்ளது.

ஸ்பான்சர்கள் நஷ்டம்

ஸ்பான்சர்கள் நஷ்டம்

இதே போல ஐபிஎல் தொடரின் ஸ்பான்சரான விவோ ஒரு சீசனுக்கு ரூ.440 கோடி செலுத்துகிறது. இந்தாண்டு அதில் பாதி தொகை மட்டுமே பிசிசிஐக்கு கிடைக்கும். மேலும் ட்ரீம் 11, CRed, Upstox, டாடா மோட்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆண்டுக்கு சுமார் ரூ.120 கோடி வழங்கி

அதிகாரி தகவல்

அதிகாரி தகவல்

இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரூ.2000 முதல் 25000 வரை நஷ்டம் அடையும். சரியான கணக்கின்றி மணக்கணக்கு போட்டால் கூட ரூ.2200 கோடி எப்படியும் நஷ்டமாகும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, May 5, 2021, 10:29 [IST]
Other articles published on May 5, 2021
English summary
BCCI to loss of over Rs.2000 crores for halting IPL 2021 mid-way
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X