For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெல்லி அணி நிச்சயம் தடுமாறும்... ஏன் ரிஷப் பண்ட் கூட சரி செய்ய மாட்டாரா? முன்னாள் வீரர் கணிப்பு!

டெல்லி: ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு கேப்டனாகியுள்ள நிலையில் அந்த அணிக்கு தடுமாற்றம் இருக்கும் என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளர்.

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்து தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாததால் என்னென்ன பிரச்னை இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

காயம்

காயம்

டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியின்போது இடதுகையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் 3 - 4 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் வரும் ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகினார்.

நீடித்த குழப்பம்

நீடித்த குழப்பம்

ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாததால் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என குழப்பம் ஏற்பட்டது. இந்த ரேசில் ஸ்டீவ் ஸ்மித், அஸ்வின், ரிஷப் பண்ட்-ன் பெயர்கள் இருந்தன. இறுதியில் ரிஷப் பண்ட் தான் டெல்லி அணியின் கேப்டன் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். டெல்லி அணி தனது முதல் போட்டியாக வரும் ஏப்.10ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சிக்கல்

சிக்கல்

இந்நிலையில் டெல்லி அணி, ஸ்ரேயாஸ் ஐயரின் வழிநடுத்தி செல்லும் திறமையையும் மிஸ் செய்யும் என்றும் மிடில் ஆர்டரில் நிலையான தன்மையின்றி அணி தடுமாற்றத்தை ஏதிர்கொள்ளும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், டெல்லி அணிக்கு கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் பிரச்னையாக இருந்தது. 4 போட்டிகளில் எதிர்கொண்டு 4 போட்டியிலும் டெல்லி தோற்றது. அதை இந்தாண்டு சரி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு ஸ்ரேயாஸ் இல்லை என தெரிவித்துள்ளார்.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

கடந்த ஆண்டு டெல்லி அணிக்கு மிகப்பெரும் பிரச்னையாக இருந்தது பவர்ப்ளேவில் தொடக்க வீரர்கள் அதிரடி காட்ட தவறியதுதான். எனவே இந்த முறை ஸ்ரேயாஸும் இல்லாததால், தவான், ஸ்மித், ரஹானே, பிரித்வி ஷா யாரேனும் ஒருவர் தொடக்கம் முதலே அதிரடி காட்டி ஆட வேண்டும் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். மேலும், மற்றபடி பவுலிங்கில் வழக்கம்போல் அக்‌ஷர் பட்டேல், அஷ்வின், ரபாடா, ஆகியோர் உள்ளனர். கடந்த முறை பவுலிங் பலமாக இருந்ததால் தான் இறுதிப்போட்டி வரை வந்தது எனவும் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, March 31, 2021, 18:59 [IST]
Other articles published on Mar 31, 2021
English summary
Brad Hogg Explains how Delhi capitals going to face without Shreyas Iyer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X