For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவரை ஏன் மீண்டும் கொண்டு வந்தார்.. மொத்தமாக குழப்பிய தோனி.. அரண்டு போன ராஜஸ்தான்.. அப்பதான் டிவிஸ்ட்

சென்னை: நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி எடுத்த முக்கியமான ஒரு முடிவுதான் மொத்தமாக அணியை வெற்றியை நோக்கி திருப்பி சென்றது.

Recommended Video

Dhoni விளக்கம் ! Ruturaj-க்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது ஏன்? | Oneindia Tamil

நேற்று ராஜஸ்தானுக்கும் சிஎஸ்கேவிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. சிஎஸ்கே அணி 188 ரன்கள் எடுத்து இருந்தாலும் கூட மும்பை பிட்ச் என்பதால் சிஎஸ்கே தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சம் நிலவியது.

அதிலும் முதல் 10 ஓவர்களில் நேற்று ராஜஸ்தான் அணி ஆடிய விதம் சிஎஸ்கேவை தோல்வியை நோக்கி நகர்த்தி சென்றது. முதல் 10 ஓவர்களில் சாம் கரனை தவிர நேற்று யாருமே சரியாக பவுலிங் செய்யவில்லை.

பவுலிங்

பவுலிங்

முக்கியமாக சாகர் ஓவரிலும், ஜடேஜா ஓவரிலும் பட்லர் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். அதிலும் ஜடேஜா வீசிய ஓவர்களில் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து பிரஷர் ஏற்றினார். பொதுவாக ஸ்பின் பவுலர்கள் ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு பவுலிங் செய்வது மிகவும் கஷ்டம். இதனால் பட்லர் நேற்று சிஎஸ்கே அணிக்கு ஆபத்தான வீரராக வலம் வந்தார்.

ஜடேஜா

ஜடேஜா

முக்கியமாக ஜடேஜா ஓவரை குறி வைத்து பட்லர் அடித்தார். ஜடேஜா உள்ளே போடுவார் என்பதால் அவரின் பந்துகளை ரிவர்ஸ் ஷாட் அடித்து பட்லர் பவுண்டரிக்கு பறக்க விட்டார். இதனால் மீண்டும் ஜடேஜாவிற்கு பட்லர் அவுட்டாகும் வரை தோனி ஓவர் கொடுக்க மாட்டார் என்றே கருதப்பட்டது. பட்லர் அவுட்டான பின்தான் ஜடேஜா ஓவர் போட வருவார் என்று கருதப்பட்டது.

ஆனால்

ஆனால்

ஆனால் மீண்டும் 12வது ஓவரை ஜடேஜாவிற்கு தோனி கொடுத்தார். இதை பார்த்து பலரும் குழம்பி போனார்கள். ஆனால் இங்குதான் ஜடேஜா மீது நம்பிக்கை வைத்து தோனி களமிறங்கினார். பிட்ச் ஸ்பின் ஆகிறது. கண்டிப்பாக விக்கெட் விழும் என்று அவர் நம்பினார். பந்தும் பழசாகிவிட்டது. இதனால் ஜடேஜா அதில் நன்றாக வீசுவார்.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்த நம்பிக்கையில்தான் ஜடேஜாவை தோனி மீண்டும் களத்திற்கு கொண்டு வந்தார். இது கொஞ்சம் ரிஸ்க் என்றாலும் தோனி நம்பிக்கை வைத்து அவரிடம் ஓவர் கொடுத்தார். சரியாக அந்த ஓவரிலேயே பட்லர் விக்கெட்டை ஜடேஜா எடுத்தார். பின்னர் அதே ஓவரில் துபே விக்கெட்டையும் ஜடேஜா எடுத்தார். இந்த ஓவர்தான் மேட்சை மாற்றியது.

பிளான்

பிளான்

தோனியின் இந்த ஓவர் தேர்வை பார்த்து ஒரு நிமிடம் ராஜஸ்தான் அணி மிரண்டு போனது. இந்த மூவை கொஞ்சம் கூட ராஜஸ்தான் எதிர்பார்க்கவில்லை. அந்த ஓவரில்தான் ராஜஸ்தானின் கையில் இருந்த ஆட்டம் சிஎஸ்கே பக்கம் வந்தது. அதன்பின் அடுத்தடுத்த ஓவர்களில் மொயின் அலி விக்கெட் எடுத்து சிஎஸ்கேவின் வெற்றிக்கு வித்திட்டார்.

Story first published: Tuesday, April 20, 2021, 12:33 [IST]
Other articles published on Apr 20, 2021
English summary
IPL 2021: Brining back Jadeja for 12th over was the game changer move by Dhoni yesterday
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X