தோனிக்கு சிஎஸ்கே அணி கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்.. நட்புக்காக தோனி செய்த விஷயம்.. வைரலாகும் வீடியோ

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு கேப்டன் தோனிக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது சிஎஸ்கே அணி.

தமிழக வீரர் Shahrukh Khan-க்கு அறிவுரை வழங்கிய Dhoni.. வைரலாக புகைப்படம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரா ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இனி சேப்பாக்கமே தேவையில்லை.. மும்பையை மொத்தமாக மாற்றிய சிஎஸ்கே.. இதுதான் சூட்சமம்.. குட்நியூஸ்!

சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடிய 200வது போட்டியில் வெற்றி பெற்றது குறித்து ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.

வெற்றி

வெற்றி

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சரிய, ஷாருக்கான் மட்டும் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி டூப்ளசிஸ் மற்றும் மொயின் அலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியது.

சிஎஸ்கே கொண்டாட்டம்

சிஎஸ்கே கொண்டாட்டம்

இந்த வெற்றி தோனிக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகும். ஏனென்றால் சிஎஸ்கே அணிக்காக அவர் ஆடும் 200வது போட்டியாகும். இதனையடுத்து மகிழ்ச்சியடைந்த சிஎஸ்கே நிர்வாகம் தோனிகாக கேக் வெட்டி அணி வீரர்களுடன் சிறப்பாக கொண்டாடியுள்ளது. இது குறித்த வீடியோ அந்த அணியின் சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

நெகிழ்ச்சி சம்பவம்

நெகிழ்ச்சி சம்பவம்

கொண்டாட்டத்தின் போது கேக் வெட்டிய தோனி முதலில் பயிற்சியாளர்கள் ஒவ்வொருவராக தேடி கேக்கை ஊட்டிவிட்டார். அதோடு நில்லாமல் அவருடன் பல வருடங்களாக சிஎஸ்கேவில் ஆடும் சுரேஷ் ரெய்னா பின் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார். எனினும் அவரை தேடிச்சென்று அவருக்கு கேக் ஊட்டி விட்டு மகிழ்ந்தார். நட்பை மறக்காமல் தோனி செய்த விஷயம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

சிஎஸ்கே சாம்பியன்

சிஎஸ்கே சாம்பியன்

தோனி தலைமையில் 12வது சீசனில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018ம் ஆண்டு என 3 முறை கோப்பையை வென்றுள்ளது. அதே போல இதுவரை ஒரே ஒரு சீசனில் மட்டுமே ப்ளே ஆஃப்-க்கு செல்லாமல் வெளியேறியுள்ளது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக அவர் திகழ்ந்து வருகிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Chennai Super Kings Celebrated MS Dhoni's 200th Match For CSK
Story first published: Saturday, April 17, 2021, 15:21 [IST]
Other articles published on Apr 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X