For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் வாய்பிலேயே சிக்ஸர்.. மேற்கு வங்கத்தின் அமைச்சரானார் மனோஜ் திவாரி.. துறை குறித்த விவரம் இதோ!

பெங்களுரூ: இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, மேற்கு வங்கத்தின் அமைச்சராக பதவியேற்று தன் வாழ்வின் மற்றொரு பக்கத்தை தொடங்கியுள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பேனர்ஜி இன்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

கொரோனா பாதிப்புக்கு எதிரான போராட்டம்... சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரூ.30 கோடி நிதியுதவி செஞ்சுருக்குகொரோனா பாதிப்புக்கு எதிரான போராட்டம்... சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரூ.30 கோடி நிதியுதவி செஞ்சுருக்கு

இதில் அவருடன் சேர்ந்து 43 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் அந்த கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற மனோஜ் திவாரியும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அரசியல் எண்ட்ரி

அரசியல் எண்ட்ரி

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மனோஜ் திவாரி நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் போதுதான் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சிவ்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் தன்னை எதிர்த்து நின்ற பாஜக வேட்பாளர் ரத்தீன் சக்ரவர்த்தியை 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வெற்றி

வெற்றி

நடந்து முடிந்த தேர்தலில் படு தீவிரமாக களமிறங்கி பிரச்சாரம் செய்த அவருக்கு மேற்கு வங்க மாநிலத்தின் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் உறுதி மொழியுடன் பதவி ஏற்றுக்கொண்டார்.

விளையாட்டு முக்கியம்

விளையாட்டே முக்கியம்

விளையாட்டே முக்கியம்

முன்னதாக தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பேசியிருந்த திவாரி, நான் இந்த நேரத்தில் விளையாட்டு துறையை எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் நான் எப்போதும் விளையாட்டுகளையும், விளையாட்டு வீரர்களையும் மேம்படுத்துவதற்காக உழைப்பேன் என தெரிவித்திருந்தார்.

அனுபவ வீரர்

அனுபவ வீரர்

35 வயதாகும் மனோஜ் திவாரி இந்திய அணிக்காக 12 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஒரு நாள் போட்டிகளில் 287 ரன்களும், டி20ல் 15 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளார். அதே போல ஐபிஎல்-ல் 98 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1695 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 10, 2021, 21:05 [IST]
Other articles published on May 10, 2021
English summary
Cricketer Manoj Tiwary Take oath as West Bengal Minister of Youth and Sports
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X