அதே தப்பு.. இவ்ளோ காசை வேஸ்ட் பண்ணிட்டீங்களே.. சிக்கலில் சிஎஸ்கே.. கடுப்பில் ரசிகர்கள்!

சென்னை : 2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமாக ஆடி தோல்வி அடைந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

அப்போது வயதான வீரர்களை நம்பியதால் தான் சிஎஸ்கே தோல்வி அடைந்தது என கடும் விமர்சனம் எழுந்தது.

மிருகத்தை போல நடத்தினார்கள்.. லிஃப்டில் நடந்த அந்த சம்பவம்.. அதிர வைத்த அஸ்வின்!

சிஎஸ்கே அணி நிர்வாகம் கூட அடுத்த சீசனில் இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்ய உள்ளதாக கூறி வந்தது.

சிஎஸ்கே முடிவு

சிஎஸ்கே முடிவு

ஆனால், 2021 ஐபிஎல் ஏலம் நடக்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் நகர்வுகள் எதுவும் அந்த அணி இளம் வீரர்களை தேர்வு செய்ய முயல்வது போல இல்லை. மீண்டும் வயதான வீரர்களையே சிஎஸ்கே அணி நம்பி களமிறங்க உள்ளது.

நீக்கம்

நீக்கம்

2021 ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக சிஎஸ்கே அணி முரளி விஜய், கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், பியுஷ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் ஆகியோரை நீக்கியது. இதை அடுத்து சிஎஸ்கே அணி இளம் வீரர்களை நோக்கி நகரப் போவதாக ரசிகர்கள் எண்ணினர்.

3 கோடி

3 கோடி

ஆனால், கடந்த இரண்டு சீசன்களாக மோசமான பார்மில் இருக்கும் ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து வாங்கி உள்ளது சிஎஸ்கே அணி. அவரை 3 கோடி கொடுத்து சிஎஸ்கே வாங்கி இருப்பது பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. உத்தப்பா ஏலத்தில் பங்கேற்று இருந்தால் கூட இந்த முறை இத்தனை பிரியா தொகைக்கு எந்த அணியும் வாங்கி இருக்காது.

அதே கதை

அதே கதை

சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஒரு பேட்டியில் ஒரு மோசமான சீசன் காரணமாக சிஎஸ்கே அணி தன் திட்டத்தை மாற்றிக் கொள்ளாது என கூறி இருக்கிறார். அதாவது, சிஎஸ்கே அணி மீண்டும் வயதான வீரர்களைக் கொண்டே ஆடும் என அவர் கூறி இருக்கிறார். இது தவறான முடிவு என ரசிகர்கள் இப்போதே விமர்சனம் செய்யத் துவங்கி உள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2021 : CSK again going with the old ways and picking old players for IPL 2021.
Story first published: Sunday, January 24, 2021, 11:41 [IST]
Other articles published on Jan 24, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X