தல சென்னைக்கு வந்தாச்சு....முதல் ஆளா ஸ்கெட்ச் போட ரெடி... இணையத்தை அதிர விடும் சி.எஸ்.கே ரசிகர்கள்

சென்னை : ஐபிஎல் போட்டி தொடங்கும் தேதியே அறிவிக்கப்படாத நிலையில் முதல் ஆளாக பணிகளை எம்.எஸ்.தோனி தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

இந்நிலையில் சிஎஸ்கே. அணியின் பயிற்சி முகாம் வரும் 8ம் தேதி முதல் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக தோனியும், அம்பத்தி ராயுடு சென்னை வந்தனர்.

அறிவிப்பு

அறிவிப்பு

ஐபிஎல் 2021 தொடருக்கான ஆயத்த பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த சீசனுக்கான போட்டிகள் அயல்நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் இந்த சீசன் எப்போது எங்கே எப்படி நடக்கும் என்பது குறித்து பிசிசிஐ அறிவிக்கவில்லை.

ஏலம்

ஏலம்

கடந்த மாதத்தில் சென்னையில் ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஏலத்தில் 8 ஐபிஎல் அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து அணியை பலப்படுத்தியுள்ளன. முக்கியமாக பஞ்சாப் அணி அதிகபட்சமாக 9 வீரர்களை எடுத்துள்ளது.

சி.எஸ்.கே

சி.எஸ்.கே

பிசிசிஐ தேதிகளை அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் சரி, தங்களது பணியை செய்கிறோம் என சிஎஸ்கே அணி களத்தில் இறங்கியுள்ளது. வரும் 8 அல்லது 9ம் தேதி முதல் அணியின் பயிற்சி முகாமை சென்னையில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பயிற்சிகளில் முதல் நாளிலிருந்தே கேப்டன் எம்எஸ் தோனி ஈடுபடுவார் என்றும் கூறியிருந்தது.

தோனி வருகை

தோனி வருகை

இந்நிலையில் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, அம்பத்தி ராயுடு ஆகியோர் இன்று சென்னை வந்தடைந்தனர். இதனால் ரசிகர்கள் இணையத்தில் ஹேஸ்டேக்களை தெரிக்கவிட்டு வருகின்றனர். மற்ற தமிழக வீரர்கள் மற்றும் ஓய்வில் இருக்கும் வீரர்களும் விரைவில் அணிக்கு வந்தடைவார்கள் என கூறப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: CSK Captain MS Dhoni, Ambati Rayudu reach Chennai, all set to start Practice
Story first published: Thursday, March 4, 2021, 11:38 [IST]
Other articles published on Mar 4, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X