For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்: ‘முடிவு இப்பயே தெரிஞ்சிருச்சே’.. சிஎஸ்கே vs ஆர்சிபி.. பலம் மற்றும் பலவீனம் என்னென்ன?

அமீரகம்: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியானது ரசிகர்களிடையே உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

35வது லீக் ஆட்டத்தில் இன்று தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியை கோலி தலைமையிலான ஆர்சிபி அணி எதிர்கொள்கிறது.

3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது! 3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது!

ஷார்ஜாவில் நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வலுவாக இருக்கும் சிஎஸ்கே

வலுவாக இருக்கும் சிஎஸ்கே

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 6 வெற்றிகள் 2 தோல்விகள் என 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் 8வது விக்கெட் வரை திறம்பட செயல்பட்டு வருகின்றனர். அதே போல பவுலிங்கிலும் ஃபுல் ஃபார்மில் இருக்கின்றனர்.

ஃபார்மில் இல்லாத ஆர்சிபி

ஃபார்மில் இல்லாத ஆர்சிபி

இதே போல இந்தாண்டு 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ள அணிகளுக்கான போட்டி என்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் இந்த போட்டியில் சிஎஸ்கேவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது எனக்கூறுகின்றனர். பெங்களூரு அணியில் தற்போது பலம் குறைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

Recommended Video

Umran Malik to replace Natarajan in SRH squad | IPL 2021 | OneIndia Tamil
4 பேட்ஸ்மேன்கள் மட்டுமே

4 பேட்ஸ்மேன்கள் மட்டுமே

ஆர்சிபி அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் கோலி, தேவ்தத் பட்டிக்கல், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் என 4 பேரை மட்டுமே நம்பியுள்ளது. மிடில் ஆர்டரில் ரன் அடிப்பதற்கு கூட பெரிய அளவில் வீரர்கள் இல்லை. டாப் 4 வீரர்களுமே கடந்த போட்டியில் சொதப்பியதால் 92 ரன்களுக்கு ஆர்சிபி சுருண்டு தோல்வியடைந்தது. இதே போல பந்துவீச்சிலும் புதிதாக வந்த வீரர்கள் முதல் பழைய வீரர்கள் வரை யாருமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

விராட் கோலி ஃபார்ம்

விராட் கோலி ஃபார்ம்

இது ஒருபுறம் இருக்க விராட் கோலியின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த அவர், கடும் மன அழுத்தத்தில் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. கடந்த போட்டியில் அவர் பேட்டிங்கில் பந்தை மீட் செய்வதற்கு தடுமாறியது ரசிகர்களுக்கு கவலை அளித்தது. எனவே இந்த போட்டியில் அவர் பொறுப்புடன் விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

Story first published: Friday, September 24, 2021, 15:43 [IST]
Other articles published on Sep 24, 2021
English summary
CSK clashes with RCB tonight in IPL 2021, Full details of Strength and weakness
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X