For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்தடுத்து அவுட்டாகி ஷாக் தந்த சிஎஸ்கே.. இக்கட்டான நேரத்தில் "ஆர்டரை" மாற்றிய தோனி.. செம சூட்சமம்!

சென்னை: டெல்லிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியிலேயே சென்னை அணி அடுத்தடுத்து ஒப்பனர்களை இழந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் டெல்லி சென்னை அணிகளுக்கு இடையில் மும்பையில் இன்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் செய்து வருகிறது.

நன்றாக ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியோ முதல் 5 ஓவர்களுக்குள் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. ருத்துராஜ், டு பிளசிஸ் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

அவுட்

அவுட்

கடந்த வருடமும் சிஎஸ்கே அணி இதேபோல் ஓப்பனிங் வீரர்களை இழந்தது. முக்கியமாக 4 விக்கெட் இழந்தால் அதன்பின் பேட்டிங் செய்யவே ஆட்கள் இல்லை. பேட்டிங் பெரிய அளவில் சென்ற வருடம் வலிமையாக இல்லை. இந்த முறையும் இப்படி நடக்கலாம் என்றே தோனி கணித்து இருந்தார்.

பேட்டிங்

பேட்டிங்

இதனால்தான் இன்று சிஎஸ்கேவில் மிக நீண்ட பேட்டிங் ஆர்டரை தோனி எடுத்துள்ளார். ரூத்துராஜ், டு பிளசிஸ், ரெய்னா, மொயின் அலி, அம்பதி ராயுடு, தோனி, ஜடேஜா, பிராவோ, சாம் கரன் என்று மிக நீண்ட பேட்டிங் ஆர்டர் உள்ளது. சாகர், தாக்கூரும் பேட்டிங் செய்வார்கள்.

கணிப்பு

கணிப்பு

இன்று இப்படி ஓப்பனிங் சொதப்பலாம் என்பதை கணித்தே தோனி இந்த சிறப்பான அணியை எடுத்துள்ளார். அதோடு இன்று ஆரம்பித்தில் டு பிளசிஸ் அவுட் ஆனதும் தோனி சூட்சமமாக செயல்பட்டு மொயின் அலியை இறக்கி உள்ளார். ரெய்னாதான் எப்போதும் சிஎஸ்கேவில் ஒன் டவுன் இறங்குவார்.

சிறப்பு

சிறப்பு

ஆனால் மொயின் அலி ஐபிஎல் தொடரில் டாப் ஆர்டரில் சிறப்பாக ஆடுவதால் இவரை ரெய்னாவிற்கு முன்பாக தோனி இறக்கினார். மொயின் அலியும் இக்கட்டான நேரத்தில் இறங்கி விக்கெட் விழுவதை கட்டுப்படுத்தி தேவையான நேரங்களில் அதிரடி காட்டினார்.

ரெய்னா

ரெய்னா

ரெய்னாவும் பல நாள் பிறகு இறங்கி அதிரடி காட்டினார். தோனியின் இந்த வலுவான பேட்டிங் தேர்வால் சிஎஸ்கே பெரிய அளவில் சரிவை சந்திக்காமல் ஆடி வருகிறது. வலுவான பேட்டிங் ஆர்டர் இருப்பதால் சிஎஸ்கே டாப் ஆர்டர் வீரர்கள் விக்கெட் விழுந்தாலும் பிரச்சனை இல்லை என்று அதிரடி காட்டி வருகிறார்கள்.

Story first published: Saturday, April 10, 2021, 20:09 [IST]
Other articles published on Apr 10, 2021
English summary
IPL 2021: CSK comes back to the game even after losing openers due its batting order strength.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X