நேற்று வந்தவருக்காக ஒதுக்கப்பட்ட சீனியர் வீரர்.. ரிஸ்க் எடுத்த சிஎஸ்கே கேப்டன் தோனி..காரணம் என்ன?

மும்பை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் முக்கிய ஸ்பின் பவுலர் ஒதுக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பையில் தொடங்கியது. இதில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியில் கடந்த ஆண்டு ப்ளேயிங் 11ல் இருந்து 3 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன..

அணி மாற்றம்

அணி மாற்றம்

சென்னை அணி கடந்த ஆண்டு சந்தித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் படு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு முழு வேகத்தில் களமிறங்கியுள்ளது. கடந்தாண்டு தொடரில் பங்கேற்காத சுரேஷ் ரெய்னா இந்தாண்டு அணியில் இடம் பெற்றுள்ளார். இதனால் பேட்டிங்கில் கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

ஒதுக்கப்பட்ட சீனியர் ப்ளேயர்

ஒதுக்கப்பட்ட சீனியர் ப்ளேயர்

பவுலிங்கில் புதிதாக வந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்காக அணியின் மூத்த வீரர் இம்ரான் தாஹீருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மும்பை பிட்ச்சானது வேகப்பந்துவீச்சுக்கு தான் அதிகம் சாதகமாக இருக்கும். எனவே மொயின் அலி ஆல்ரவுண்டர் என்பதால் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவார் என வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தாஹிர் ஆல் ரவுண்டர் கிடையாது.

விவரம்

விவரம்

கடந்த வருடமும் இம்ரான் தாஹிருக்கு சென்னை அணியில் பெரிய அளவில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே ஒவ்வொரு அணியிலும் அனுமதி. கடந்த வருடம் சாம் கரணுக்கு பெரியளவில் வாய்ப்புகள் கொடுத்ததால் இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு ஏதும் பெரியளவில் கிடைக்கவில்லை. கடைசி சில போட்டிகளிலேயே பங்கேற்றார்.

ரிஸ்க் எடுத்த தோனி

ரிஸ்க் எடுத்த தோனி

சென்னை அணிக்காக பல்வேறு சமயங்களில் விக்கெட் எடுத்துக்கொடுத்து உதவியவர் அனுபவ வீரர் இம்ரான் தாஹீர். கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் அதிக விக்கெட் எடுத்தவராகவும் திகழ்ந்தார். இந்நிலையில் புதிதாக வந்த வீருக்காக அவர் ஒதுக்கப்பட்டுள்ளதால் சிஎஸ்கே அணிக்கு சாதகமா,பாதகமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CSK didn't give a chance for Imran thahir because of new recruit in CSK vs DC match
Story first published: Saturday, April 10, 2021, 19:55 [IST]
Other articles published on Apr 10, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X