For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்: டூப்ளசிஸ் முதல் சாம் கரண் வரை இல்லை? சிஎஸ்கேவுக்கு வந்த சிக்கல்.. எப்படி சமாளிப்பார் தோனி?

அமீரகம்: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முக்கிய வீரர்கள் இல்லாமல் பின்னடைவை சந்திக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐபிஎல் தொடரின் 2ம் பகுதி ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கடந்தாண்டை போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் திவீரமாக நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒருவார காலமே இருப்பதால், அனைத்து அணிகளும் அமீரகத்திற்கு சென்றுவிட்டன. அயல்நாட்டு வீரர்களும் அணி பபுளுடன் இணைந்து வருகின்றனர். இந்த தொடரின் முதல் ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த அணிகள் மோதும் போட்டி, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் போன்று விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் முதல் போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உச்சக்கட்ட எதிர்பார்ப்பு

உச்சக்கட்ட எதிர்பார்ப்பு

இந்த போட்டிக்கான எதிர்பார்ப்புகள் ஏக போகத்திற்கு எகிறியுள்ளது. இந்த தொடரின் முதல் பகுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியிருந்தது. எனவே அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் சிஎஸ்கேவும், முதல் போட்டியையே வெற்றியுடன் தொடங்க வேண்டும் என மும்பை அணியும் முணைப்பு காட்டி வருகின்றன.

Recommended Video

Sourav Ganguly explains MS Dhoni’s appointment as India’s mentor | OneIndia Tamil
 பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இந்த தொடரில் மிகப்பெரும் பின்னடைவுகள் ஏற்படவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் டுவைன் பிராவோ மற்றும் ஃபாஃப் டூப்ளசிஸ் ஆகியோர் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்றிருந்த போது பிராவோவுக்கு காயம் ஏற்பட்டது. அவர் குணமடைந்து மீண்டும் போட்டிக்கு திரும்பிவிட்டார். எனினும் காயத்தினால் இன்னும் ஒரு ஓவர் கூட பந்து வீசாமல் உள்ளார். இதே போல கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் அசுரத்தனமான பேட்டிங் ஃபார்மில் இருந்த டூப்ளசிஸுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கான சிகிச்சை நடைபெற்று வருகிறது.

அவருக்கான சிகிச்சை நடைபெற்று வருகிறது.

ப்ளே ஆஃப் சிக்கல்

ப்ளே ஆஃப் சிக்கல்

எனவே முதல் சில போட்டிகளில் இவர்கள் இருவரும் ப்ளேயிங் 11ல் இடம்பெற மாட்டார்கள் எனத் தெரிகிறது. இதே போல ப்ளே ஆஃப் சுற்றிலும் சிஎஸ்கேவுக்கு ஒரு சிக்கல் உள்ளது. ஒருவேளை சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால், சாம் கரண் மற்றும் மொயீன் அலி ஆகியோர் அணியில் இடம் பெறமாட்டார்கள். டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்காக ப்ளே ஆஃப் சுற்றுகளின் போது அவர்கள் இருவரும் இங்கிலாந்து அணியுடன் இணையவுள்ளதாக தெரிகிறது.

நல்ல ஃபார்ம்

நல்ல ஃபார்ம்

நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூப்பர் கம்பேக் கொடுத்திருந்தது. இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் 2வது பகுதி ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் எப்படி சமாளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Monday, September 13, 2021, 11:08 [IST]
Other articles published on Sep 13, 2021
English summary
CSK in Lots of issues in 2nd leg of IPL 2021, after star player were injured
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X