For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி விஷயத்தில் சிஎஸ்கே கரார்.. ரசிகர்களின் கோரிக்கையும் வேஸ்ட்.. வாய்த்திறந்த அணியின் பயிற்சியாளர்!

மும்பை: சிஎஸ்கே கேப்டன் தோனியின் பேட்டிங் பொசிஷன் குறித்து தொடர்ந்து கருத்துகள் பரவி வரும் நிலையில் பயிற்சியாளர் ஸ்டீபன் அதுகுறித்து வாய்த்திறந்துள்ளார்.

Recommended Video

Dhoni சுய விமர்சனம்.. 'அந்த 6 Ball, Match-ல தோத்து இருப்போம்..' | Oneindia Tamil

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்த நிலையில் அதற்கு அடுத்த 2 போட்டிகளிலும் அசத்தல் வெற்றி பெற்றும் கம்பேக் கொடுத்துள்ளது.

இளம் வீரருக்காக வக்காளத்து வாங்கும் சிஎஸ்கே.. தோனி வாய்த்திறக்கவே இல்லை.. அப்செட்டில் சீனியர் வீரர்! இளம் வீரருக்காக வக்காளத்து வாங்கும் சிஎஸ்கே.. தோனி வாய்த்திறக்கவே இல்லை.. அப்செட்டில் சீனியர் வீரர்!

நேற்றைய போட்டியில் கேப்டன்சியில் மீண்டும் தன்னை நிரூபித்த தோனி, பேட்ஸ்மேனாக இன்னும் பெரியளவில் ஏதும் செய்யவில்லை.

ஏமாற்றும் தோனி

ஏமாற்றும் தோனி

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 200 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றம் தந்த தோனி இந்தாண்டு ஐபிஎல் தொடருக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதுகுறித்த வீடியோக்களும் வைரலானது. இவரின் கேப்டன்சியில் சென்னை அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறது. எனினும் தோனியின் அதிரடி பேட்டிங்கை சிஎஸ்கே அணி ரசிகர்கள் மிஸ் செய்து வருகின்றனர்.

காரணம்

காரணம்

இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளில் 2 இன்னிங்ஸ்களில் பேட்டிங்கிற்கு களமிறங்கிய கேப்டன் தோனி, முதல் போட்டியில் டக் அவுட் மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். தோனி 6-7வது வீரராக களமிறங்குவதே இதற்கு காரணம். அவர் 4 - 5வது வீரராக களமிறங்கி பிரஷர் இன்றி ஆட வேண்டும் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

விளக்கம்

விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங், ஒவ்வொரு முறையும் தோனி மிடில் ஆர்டரில் விளையாடும் போது, தன்னை மேம்படுத்திக்கொண்டே வருகிறார். அணியில் பல சிறந்த வீரர்கள் உள்ளதால் பேட்டிங் ஆர்டரை சரிசெய்வது சவாலாக உள்ளது. ஆனால் தோனியின் பேட்டிங் ஆர்டரை மேல் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. ஜடேஜாவை கீழ் இறக்கிவிட்டு தோனியை மேல் கொண்டு செல்லலாம். ஆனால் தற்போது அது முக்கியமில்லை.

சவாலாக உள்ளது

சவாலாக உள்ளது

தற்போது நாங்கள் நினைப்பதெல்லாம், பக்காவாக ஒரு பேட்டிங் ஆர்டரை உறுதிப்படுத்துவதுதான். நாங்கள் திட்டமிட்டபடி எங்களிடம் நிறைய சிறப்பான பேட்டிங் பலம் உள்ளது சிஎஸ்கேவின் ஆட்டத்திற்கு ஊக்கமளிக்கிறது. எனினும் அதனை நாங்கள் இன்னும் சரியான முறையில் ஒருங்கினைக்கவில்லை. அதனை சரிசெய்ய தோனி முக்கிய பங்கு வகிப்பார் என ஃப்ளெம்மிங் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, April 20, 2021, 13:18 [IST]
Other articles published on Apr 20, 2021
English summary
CSK opens up on MS Dhoni batting position in this season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X