பேருந்துக்குள் இப்படி ஒரு கொண்டாட்டமா.. பிராவோவால் நடந்த கச்சேரி.. சிரித்தபடியே சென்ற தோனி - வீடியோ

அமீரகம்: ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பின்னர் சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ பேருந்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் நேற்று துபாயில் கோலாகலமாக முடிவு பெற்றது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி கோப்பையை தட்டிச்சென்றது.

சிஎஸ்கேவின் வெற்றி விழா தோனிக்காக நிர்வாகம் எடுத்த பெரும் முடிவு.. உற்சாகத்தில் மிதக்கும் ரசிகர்கள்!சிஎஸ்கேவின் வெற்றி விழா தோனிக்காக நிர்வாகம் எடுத்த பெரும் முடிவு.. உற்சாகத்தில் மிதக்கும் ரசிகர்கள்!

கோப்பை வென்ற சிஎஸ்கே

கோப்பை வென்ற சிஎஸ்கே

முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. ருதுராஜ், டூப்ளசிஸ், உத்தப்பா, மொயீன் அலி என அனைவருமே அதிரடி காட்டினர். இதன் பின்னர் விளையாடிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் மட்டுமே சிறப்பாக இருந்தது. மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் 20 ஓவர்களில் அந்த அணி 165 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

 விமர்சனங்களுக்கு பதிலடி

விமர்சனங்களுக்கு பதிலடி

இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியெல்லாம் வேஸ்ட், வயதானவர்கள் அணி என கடந்தாண்டு கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தாண்டு பல்வேறு அதிரடிகளை கொடுத்தது சென்னை அணி. குறிப்பாக தோனி அதிரடி காட்டி இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றது அனைவருக்கும் விருந்தாக அமைந்தது.

பேருந்தில் வெற்றிக் கொண்டாட்டம்

பேருந்தில் வெற்றிக் கொண்டாட்டம்

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் பேருந்தில் உற்சாகமாக வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ, தானாகவே பாடல் ஒன்றை பாடி அதற்கு குத்தாட்டமும் போட்டுள்ள வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

புகழ்ந்து தள்ளிய பிராவோ

புகழ்ந்து தள்ளிய பிராவோ

அந்த வீடியோவில் டுவைன் பிராவோ, we are kings, we are the kings, Chennai super kings என புகழ்ந்து தள்ளியுள்ளார். குறிப்பாக பேருந்தில் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த எம்.எஸ்.தோனி குறித்தும் அவர் புகழ்ந்து பாடியது, அணி வீரர்கள் அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

சிஎஸ்கே விழா

சிஎஸ்கே விழா

சென்னை அணியின் வெற்றிக்கொண்டாட்டம், சென்னையில் நடைபெறவுள்ளது. டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன், தோனி இந்தியா திரும்பியவுடன் பிரமாண்டமாக வெற்றி விழாவை கொண்டாட சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CSK Player Dwayne Bravo dances in the team bus after Clinch 4th title in IPL 2021
Story first published: Saturday, October 16, 2021, 20:41 [IST]
Other articles published on Oct 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X