‘ரத்தம் சொட்ட சொட்ட சென்ற டூப்ளசிஸ்’.. எமனாக விளங்கும் அபுதாபி மைதானம்.. 2வது முறையாக பலத்த அடி!

அபுதாபி: பட்ட இடத்திலேயே படும் என்பது போல அபுதாபியில் மீண்டும் ஒரு முறை நல்ல அடி வாங்கியுள்ளார் சிஎஸ்கே வீரர் டூப்ளசிஸ்.

சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வரும் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிட்ச்-ன் தன்மை போக போக பேட்டிங்கிற்கு எதிராகும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்தார்.

4 ஓவருக்குள் 400 பிரச்னை..சிஎஸ்கே அணி தோற்றுவிடுமா?.. அனைத்து வீரர்களும் ஏமாற்றினர்.. சோகத்தில் தோனி4 ஓவருக்குள் 400 பிரச்னை..சிஎஸ்கே அணி தோற்றுவிடுமா?.. அனைத்து வீரர்களும் ஏமாற்றினர்.. சோகத்தில் தோனி

கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் சீரான வேகத்தில் விக்கெட்களை பறிகொடுத்து ரன்களை உயர்த்தி வருகிறது. சுப்மன் கில் 9 ரன்கள் மற்றும் வெங்கடேஷ் ஐயர் 18 ரன்கள் எடுத்து ஏமாற்ற பின்னர் வந்த ராகுல் திரிபாதி நிதிஷ் ராணா ஆகியோர் அதிரடி காட்டி ரன்களை குவித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டிக்கு இடையே சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

டூப்ளசிஸுக்கு காயம்

டூப்ளசிஸுக்கு காயம்

சென்னை அணியின் நட்சத்திர வீரரான ஃபாஃப் டூப்ளசிஸ் கைகளில் ரத்தம் சொட்ட சொட்ட பெவிலியனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆட்டத்தின் 3வது ஓவரில் தீபக் சஹார் வீசிய 2வது பந்தை வெங்கடேஷ் ஐயர் தூக்கி அடிக்க முயன்றார். பிட்ச்-க்கு அருகிலேயே மிகவும் அழகாக வந்த கேட்ச்-ஐ ஃபீல்டிங்கில் நின்றுக் கொண்டிருந்த டூப்ளசிஸ் டைவ் அடித்து பிடிக்க முயன்றார்.

விரல்களில் ரத்தம்

விரல்களில் ரத்தம்

மிகவும் கீழாக சென்ற பந்தை பிடிப்பதற்காக கைகளை மிக கீழ் கொண்டு சென்றதால் டூப்ளசிஸின் விரல்கள் மைதானத்தின் தரையில் தேய்ந்தது. இதனால் அவர் விரல்களில் வலி தாங்க முடியாமல் சிரமப்பட்டார். ஏற்கனவே விரல்களில் அதிக காயங்களுடன் டேப் போட்டிருந்த டூப்ளசிஸுக்கு மீண்டும் அங்கேயே அடிபட்டதால் காயம் அதிகமாகி ரத்தம் வரத் தொடங்கியது. இதே போல கால்களிலும் நல்ல அடிபட்டு ரத்தம் வெளியே தெரிய தொடங்கியுள்ளது. இதனால் ரத்தம் சொட்ட சொட்ட அவர் ஓய்வறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

எமனான அபுதாபி

எமனான அபுதாபி

இந்த மைதானம் டூப்ளசிஸுக்கு எமனாக விளங்கி வருகிறது. இந்தாண்டு இங்கு நடைபெற்ற நடைபெற்ற பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடரின் போது கட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய டூப்ளசிஸ் பவுண்டரிக்கு சென்ற பந்தை முயன்றார். அப்போது சக வீரர் முகமது ஹஸ்னைன் மீது மோதி விபத்தானது. அதாவது டூப்ளசிஸ் முகம், ஹசனின் காலில் பட்டு படு மோசமாக காயம் ஏற்பட்டது.

சுயநினைவு இல்லை

சுயநினைவு இல்லை

படுகாயமடைந்த டூப்ளசிஸ் சுயநினைவின்றி வெளியில் சில நேரம் உட்காரவைக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு அவர் பழைய நினைவுகள் சிலவற்றை மறந்துவிட்டார் என்றும், சிறிது காலம் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதே போல தற்போதும் காயம் ஏற்பட்டுள்ளது.

அச்சம் தெரிவித்த டூப்ளசிஸ்

அச்சம் தெரிவித்த டூப்ளசிஸ்

இன்றைய ஆட்டத்திற்கு முன்னறும் டூப்ளசிஸ் அச்சம் தெரிவித்திருந்தார். அதில் அபுதாபி மைதானத்தை என்னால் மறக்கவே முடியாது. எனக்கு சுயநினைவே இல்லை. ஆனால் அதற்காகவெல்லாம் என்னால் ஓரமாக உட்கார முடியாது, சிறப்பாக ஃபீல்டிங் செய்வேன் எனக்கூறி களமிறங்கினால். ஆனால் தற்போது அவர் பேட்டிங்கிற்கு களமிறங்குவாரா என்பதிலேயே சந்தேகம் நிலவுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CSK 's Star player Faf duplessis got injured during fielding against KKR in IPL 2021
Story first published: Sunday, September 26, 2021, 17:39 [IST]
Other articles published on Sep 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X