For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"அந்த" ஆட்டம் நியாபகம் இருக்கா? இதுக்கும் மேல பொறுக்க கூடாது.. உடனே சிஎஸ்கே இவரை டீமில் எடுக்கணும்!

சென்னை: இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி தனது ஓப்பனிங் இணையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Recommended Video

அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்.. CSK-வுக்கு எதிராக தமிழில் ஸ்கெட்ச் போட்ட வீரர்கள்

2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தந்து முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது. சாகர் அதிரடியாக பவுலிங் செய்து நேற்று 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதன் மூலம் தொடக்கத்திலேயே 6 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் மொத்தமாக சரிந்தது. பின் ஆட்டத்தின் இறுதி வரை ஆதிக்கம் செலுத்திய சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

மோசம்

மோசம்

நேற்று சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் வீரர் ருத்திராஜின் ஆட்டம் மோசமாக இருந்தது. இவர் 16 பந்தில் வெறும் 5 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடந்த போட்டியிலும் கூட ரூத்துராஜ் ஆட்டம் மிக மோசமாகவே இருந்தது. இரண்டு போட்டிகளாக ரூத்துராஜ் திணறி வருகிறது.

சையது முஷ்டாக்

சையது முஷ்டாக்

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் இவர் மோசமாக சொதப்பினார். இதனால் இவரை மேலும் சிஎஸ்கே அணியில் வைத்திருக்க வேண்டுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இவருக்கு பதிலாக சிஎஸ்கேவில் ராபின் உத்தப்பாவை களமிறங்க வைக்கலாம்.

நல்ல பார்ம்

நல்ல பார்ம்

இவர் மிக சிறப்பான பார்மில் இருக்கிறார். ராபின் உத்தப்பா நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் கேரளா அணிக்காக ஆடினார். இதில் பல போட்டிகளில் 80+ ரன்களை எடுத்தார். தனது வாழ்நாளில் மிக சிறப்பான பார்மில் உத்தப்பா இருக்கிறார்.

1000 ரன்கள்

1000 ரன்கள்

இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக 1000 ரன்களை எடுக்க வேண்டும் என்பதை எனது திட்டம் என்று உத்தப்பா கூறி இருந்தார். இதனால் இவரை ஆடும் அணியில் சிஎஸ்கே அணி இறக்கி பார்க்கலாம். பார்மில் இல்லாத ரூத்துராஜை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வைத்துவிட்டு உத்தப்பாவை கொண்டு வர சிஎஸ்கே திட்டமிடலாம்.

Story first published: Saturday, April 17, 2021, 9:30 [IST]
Other articles published on Apr 17, 2021
English summary
IPL 2021:CSK should consider adding Robin Uththappaa in playing 11 instead of Ruturaj
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X