For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்ப வேணாம் வேணாம்னு சொல்லிட்டு.. இப்ப புலம்புனா எப்படி? சிஎஸ்கே நிர்வாகம் செய்த பெரிய தப்பு.. செக்!

சென்னை: சிஎஸ்கே அணியில் ஜோஸ் ஹஸல்வுட்டிற்கு மாற்று வீரரை தேர்வு செய்வதில் நேர்ந்த தாமதமே தற்போது அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.

2021 ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக சிஎஸ்கே வீரர் ஜோஸ் ஹஸல்வுட் தெரிவித்தார். கொரோனா விதிகளை காரணம் காட்டி அவர் விலகி இருக்கலாம் என்று கூறப்பட்டது..

பயோ பபுளில் இருக்க விரும்பாமல் அவர் வெளியேறி இருக்கலாம் என்கிறார்கள். இதற்கு பின் நிறைய காரணங்கள் பட்டியலிடப்பட்டது. ஆனால் உண்மையான காரணம் வெளியாகவில்லை.

சீசன்

சீசன்

இவருக்கு கடந்த சீசனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அப்போதே இவர் விரக்தியில் இருந்தார். இதனால் அணியில் இருந்தாலும் கூட சிஎஸ்கேவில் இவருக்கு ஆட வாய்ப்பு கிடைக்காது. பெரும்பாலும் ஆடும் அணியில் எடுக்கப்பட மாட்டார்கள் என்பதால் இவர் விலகி இருக்கலாம் என்று கூறப்பட்டது.

அவசரம் இல்லை

அவசரம் இல்லை

இவர் போனதும் சிஎஸ்கே உடனே இவருக்கு மாற்று வீரரை ரெடி செய்யாமல் தவறு செய்தது. ஹஸல்வுட்டிற்கு மாற்று வீரரை தேர்வு செய்வது எங்கள் நோக்கம் இல்லை. அதற்கு இப்போது அவசரம் இல்லை என்று சிஎஸ்கே அணி நிர்வாகமே வெளிப்படையாக அறிவித்தது. ஹஸல்வுட்டுக்கு உடனடியாக மாற்று பார்க்காமல் காலம் தாழ்த்தியது.

அணுகியது

அணுகியது

இதற்காக ஆஸ்திரேலியாவின் பில்லி ஸ்டான்லேக், இங்கிலாந்தின் ரேஸ் டோப்லி ஆகியோரை சிஎஸ்கே அணுகியது. ஆனால் அவர்கள் வரவில்லை என்றதும் மாற்று வீரரை பார்க்கும் ஏற்பாட்டை தள்ளிப்போட்டது. பெரிய அளவில் அதன்பின் யாரிடமும் சிஎஸ்கே அணி நிர்வாகம் பேசவில்லை.

பெரிய விஷயம்

பெரிய விஷயம்

மிகவும் தாமதமாகவே ஹஸல்வுட்டுக்கு மாற்றாக ஆஸ்திரேலியாவின் பெஹன்டிராபை சிஎஸ்கே தேர்வு செய்தது. அப்போது இதை சிஎஸ்கே பெரிய விஷயமாக நினைக்கவில்லை. அப்போதே சிஎஸ்கே துரிதமாக செயல்பட்டு ஒரு வெளிநாட்டு பாஸ்ட் பவுலரை எடுத்து இருந்தால் இன்று சிஎஸ்கே நல்ல பவுலர்கள் இல்லாமல் திணறி இருக்காது.

தவறு

தவறு

கடந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைய வெளிநாட்டு பாஸ்ட் பவுலர் இல்லாததே காரணம். அப்போது இது முக்கியம் இல்லை என்று கூறிவிட்டு இப்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் புலம்ப தொடங்கி உள்ளது. கடந்த சீசனிலும் ரெய்னா, ஹர்பஜனுக்கு சிஎஸ்கே அணி மாற்று வீரரை தேர்வு செய்யாமல் போனதே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 12, 2021, 13:42 [IST]
Other articles published on Apr 12, 2021
English summary
IPL 2021: CSK should not have waited long to find a replacement for Hazelwood
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X