கடைசி வார்னிங்.. சிஎஸ்கேவின் முக்கிய வீரருக்கு பறந்த மெசேஜ்.. மொத்தமாக "வேட்டு" வைக்க போகும் தோனி?

சென்னை: சிஎஸ்கே அணியில் முக்கியமான வீரர் ஒருவர் தொடர்ந்து சொதப்பி வருவது அணி நிர்வாகத்தை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

Table-topper CSK ready for Mumbai Indians challenge | Oneindia Tamil

2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி வருகிறது. முதல் போட்டியில் டெல்லியிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

அந்த 11 பேர் யார்? நம்பிக்கையோடு களமிறங்கும் தோனி.. மும்பைக்கு எதிரான முக்கியமான கேம்.. முழு விபரம்

ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் சிஎஸ்கே வரிசையாக ஆடி வெற்றிபெற்றது. 5 போட்டிகளில் வரிசையாக வென்று தற்போது சிஎஸ்கே டேபிள் டாப்பராக உள்ளது.

சிஎஸ்கே சிக்கல்

சிஎஸ்கே சிக்கல்

சிஎஸ்கே அணியில் தற்போது ஒரே குறை என்றால் அது ஷரத்துல் தாக்கூர் பார்ம்தான். இதுவரை 6 போட்டிகளில் ஷரத்துல் தாக்கூர் 2 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் எக்கச்சக்கமாக ரன்களை வாரி வழங்கி உள்ளார்.

ரன்கள்

ரன்கள்

அதிலும் இவரிடம் பவுன்சரை தவிர சரியான லைன், லென்த் பந்துகள் இல்லை. டெத் ஓவர்களில் மிக மோசமாக வீசுகிறார். வைட் யார்க்கர் போட முடியாமல் கஷ்டப்படுகிறார்.

அதிகம்

அதிகம்

முன்பெல்லாம் விக்கெட் அதிகம் எடுத்து ரன்களையும் வாரி வழங்குவார். இதனால் விக்கெட் டேக்கர் என்ற பெயரில் ஷரத்துல் தாக்கூர் வலம் வந்தார். ஆனால் இப்போது இவர் விக்கெட் எடுப்பதே இல்லை.

சிக்கல்

சிக்கல்

இதனால் ஷரத்துல் தாக்கூர் மீது ரசிகர்கள் தொடங்கி சிஎஸ்கே அணி நிர்வகம் வரை எல்லோரும் செம டென்ஷனில் இருக்கிறார்கள். இவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இன்று நடக்கும் போட்டியே இவரின் கடைசி போட்டியாக இருக்கும் என்கிறார்கள்.

வாய்ப்பு

வாய்ப்பு

ஷரத்துல் தாக்கூருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டது இன்றுதான் இவருக்கு கடைசி வார்னிங் கொடுக்கப்படும். இன்றும் இவர் சரியாக ஆடவில்லை என்றால் இவரை அணியில் இருந்து தோனி நீக்கிவிடுவார் என்று தகவல்கள் வருகின்றன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: CSK should reconsider of giving chances to Shardul Thakur anymore.
Story first published: Saturday, May 1, 2021, 9:28 [IST]
Other articles published on May 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X