For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த ஒரு ஓவர்தான்.. சிஎஸ்கே பக்கம் மொத்தமாக திரும்பிய ஆட்டம்.. ஷாக்கான ராஜஸ்தான்.. எப்படி நடந்தது?

மும்பை: ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே பவுலர்கள் இன்று வீசிய முதல் 10 ஓவர்கள் காரணமாக கேப்டன் தோனி மிகவும் கோபமாக காணப்பட்டார். ஆனால் அதன்பின் சிஎஸ்கே அணி மிக பெரிய கம்பேக்கை 10வது ஓவருக்கு பின் கொடுத்தது.

Recommended Video

Dhoni சுய விமர்சனம்.. 'அந்த 6 Ball, Match-ல தோத்து இருப்போம்..' | Oneindia Tamil

சென்னைக்கும் ராஜஸ்தானுக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட்டிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.

ராஜஸ்தானுக்கு சிஎஸ்கே 189 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மும்பை பிட்ச் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால் சிஎஸ்கே பவுலர்கள் ரன் செல்லாமல் கட்டுப்படுத்த கடுமையாக திணறி வருகிறார்கள்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

இந்த போட்டியில் முதல் 10 ஓவர்களில் ராஜஸ்தான் 81 ரன்கள் எடுத்தது. முக்கியமாக முதல் பவர் பிளேவில் ராஜஸ்தான் சிறப்பாகவே பேட்டிங் செய்தது. டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கேவின் பவுலிங் எப்படி சொதப்பியதோ அதேபோல் இன்றும் முதல் 10 ஓவர்களில் சிஎஸ்கேவின் பவுலர்கள் மோசமாக சொதப்பினார்கள்.

கட்டர்

கட்டர்

இந்த பிட்ச் கட்டர்களுக்கு ஒத்துழைக்கும் என்பதால் சிஎஸ்கே வீரர்கள் வரிசையாக கட்டர்களை வீசினார்கள். ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால் ஷரத்துல் தாக்கூரும், சாகரும் சரியான லென்தில் கட்டங்களை வீசவில்லை. பேட்ஸ்மேனுக்கு அருகில் கட்டர்களை வீசினால் பட்லர், துபே உள்ளிட்ட ராஜஸ்தான் வீரர்கள் திணறுவார்கள்.

சாகர்

சாகர்

ஆனால் தாகூர், சாகர் இருவரும் அடுத்தடுத்து இந்த லென்தில் போடாமல் ஷார்ட் பந்துகளை தொடர்ந்து வீசினார்கள். இதை பயன்படுத்தி பட்லர் சிஎஸ்கே பவுலர்களை அடித்து வெளுத்தார். ஒரு ஓவர் ஜடேஜா இவரின் காலுக்கு அருகேயிலே போட்டார். அந்த பாலில் பட்லர் திணறியதோடு, பின் ஜடேஜா ஓவரிலேயே அவுட்டும் ஆனார். இந்த லென்தைதான் சாகர் தொடக்கத்தில் மிஸ் செய்தார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே முதல் போட்டியிலும் இங்குதான் சொதப்பியது. இன்றும் இதனால் தோனி மைதானத்தில் கோபமாக இருந்தார். சாகர் வீசிய அவரின் 3வது ஓவரில் தோனி கோபமாக சென்று சாகரிடம் அறிவுரை வழங்கினார். லைன் - லென்தை மிஸ் செய்ய வேண்டாம் என்பது போல தோனி அறிவுரை வழங்கினார். வரும் போட்டிகளில் சிஎஸ்கே பவுலர்கள் இதை கண்டிப்பாக மாற்றியாக வேண்டும்.

10 ஓவர்

10 ஓவர்

முதல் 10 ஓவர்களில் சஞ்சு, வோஹ்ரா விக்கெட் விழுந்தாலும் தோனி கொஞ்சம் டென்ஷானாகவே இருந்தார். ஆனால் அதன்பின் மொத்தமாக ஆட்டமே மாறியது. 12வது ஓவரில்தான் ஜடேஜா அடுத்தடுத்து பட்லர், துபே விக்கெட்டுகளை எடுத்து கொஞ்சம் நிம்மதி கொடுத்தார். இந்த ஓவரில் மொத்தமாக ஆட்டம் சிஎஸ்கே பக்கம் வந்தது. இந்த ஓவர்தான் சிஎஸ்கே அணிக்கு கொஞ்சம் சாதகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விக்கெட்

விக்கெட்

12வது ஓவரில் இந்த இரண்டு விக்கெட்தான் டிவிஸ்ட் கொடுத்தது. அதன்பின் 13வது ஓவரில் மொயின் அலி மீண்டும் ஸ்டிரைக் செய்து டேவிட் மில்லர் விக்கெட்டை எடுத்தார். பின்னர் மீண்டும் மொயின் அலி வீசிய 15வது ஓவரில் அடுத்தடுத்து ரியான் பராக், மோரிஸ் அவுட் ஆனார்கள். இதுதான் ராஜஸ்தான் அணியை மொத்தமாக தோல்வியை நோக்கி கொண்டு சென்றது.

பிட்ச்

பிட்ச்

பிட்ச் பாஸ்ட் பவுலிங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்தாலும் இரண்டாவது இன்னிங்சில் எளிதாக அடிக்கலாம் என்றே ராஜஸ்தான் நினைத்தது. ஆனால் பிட்ச் கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் ஸ்பின் பவுலிங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்தது. இதுதான் மொத்தமாக சிஎஸ்கே அணிக்கு சாதகமாக மாறியது.

Story first published: Monday, April 19, 2021, 23:00 [IST]
Other articles published on Apr 19, 2021
English summary
IPL 2021: CSK spin bowlers turned the match away from RR in a few overs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X