For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னப்பா சொல்றீங்க.. சி.எஸ்.கே. டீமில் இவர் இல்லையா?.. மும்பை-சென்னை பிளேயிங் லெவன் இதுதான்!

சென்னை: கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. இன்னும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது.

 IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி - IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி -

அதுவும் இன்றைய முதல் ஆட்டத்தில்(30-வது ஆட்டம்) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகள் இந்த இரண்டுதான் என கூறப்படுகிறது.

ரசிகர்கள் பட்டாளம்

ரசிகர்கள் பட்டாளம்

மும்பை அணியின் கேப்டன் ஹிட்மேன் ரோகித் சர்மாவும், ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட சென்னை அணியின் கேப்டன் மிஸ்டர் கூல் தோனியின் ஆட்டத்தை நேரடியாகவும், டெலிவிஷனில் கணிப்பதற்கு ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்து கிடக்கின்றனர். இரு அணிகளிலும் ஆல்ரவுண்டர் வரிசைக்கும், அதிரடி பட்டாளத்துக்கும், பந்து வீச்சில் மிரட்டுவதற்கும் வீரர்களுக்கு பஞ்சமில்லை.

டுவிட்டரில் போட்டி

டுவிட்டரில் போட்டி

போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவிருந்தாலும் இரு அணிகளின் ரசிகர்கள் மேட்ச் குறித்து இப்போதே டுவிட்டரில் பரபரக்க தொடங்கி விட்டனர். மும்பை அணியின் பிளெயிங் லெவனில் யார் யார் இடம்பெறுவார்? இடம் பெற வேண்டும்? என்றும் சென்னை அணியில் பிளெயிங் லெவனில் யார், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? கிடைக்க வேண்டும்? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பறக்க விட்டு வருகின்றனர்.

 பிளெயிங் லெவன்

பிளெயிங் லெவன்

இந்த நிலையில் சென்னை-மும்பை மேட்ச்சில் பிளெயிங் லெவனில் யார், யார் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி இப்போது காண்போம். சென்னையை அணியை பொறுத்தவரை தொடக்க வீரர் பிளிசிஸ்சுக்கு இடுப்பு பகுதியில் அடைந்த காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் பங்கேற்பது சந்தேகம்தான். இதேபோல் அணியின் முக்கிய ஆல்ரவுண்ரடான 'சுட்டிக்குழந்தை' சாம் கரணுக்கு கொரோனா தனிமைபடுத்துதல் நெறிமுறைகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே அவர் பங்கேற்க மாட்டார்.

 குயின்டன் டி காக்

குயின்டன் டி காக்

தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டுடன் மொயின் அலி களம் இறங்குவார் என தெரிகிறது. ராயுடு ஒன் டவுனிலும், ரெய்னா அடுத்த இடத்திலும் களம் இறங்குவார்கள். தோனி மிடில் வரிசையில் ஆட உள்ளார். பிராவோ அல்லது ஜடேஜா என இருவரில் ஒருவருக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கலாம். மும்பை அணியை பொறுத்தவரை குயின்டன் டி காக்குக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்ப்டும் என்று தெரிகிறது. கேப்டன் ரோகித் வழக்கம்போல் ஓப்பனிங்கில் இறங்குவார். ஆல்ரவுண்டர் வரிசையில் நாதன் கவுல்டருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது. மற்றபடி எந்த மாற்றமும், இருக்காது.

 உத்தேச பட்டியல்

உத்தேச பட்டியல்

இன்றைய ஆட்டத்தில் இரு அணி வீரர்களின் பிளெயிங் லெவன் உத்தேச பட்டியல் பின்வருமாறு:-

சென்னை: கெய்ட்வாட், மொயீன் அலி(ஓப்பனிங்), அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி(மிடில் ஆர்டர்), பிராவோ, ஜடேஜா, ஷரத்துல் தாக்குர், தீபக் சாஹர், நிகிடி இம்ரான் தாஹிர்

மும்பை: ரோகித் சர்மா, குயின்டன் டி காக்(ஒப்பனிசங்), சூர்யகுமார், இஷான் கிஷன், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குருனல் பாண்ட்யா, நாதன் கவுல்டர் நிலே, ராகுல் சாஹர், பும்ரா, போல்ட்

Story first published: Sunday, September 19, 2021, 19:06 [IST]
Other articles published on Sep 19, 2021
English summary
Chennai Super Kings and Mumbai Indians will clash in today's match of the IPL series. It seems that Moin Ali will join the Chennai team with Rudraj as the opening batsman
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X