For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘இன்று சரவெடி உறுதி’.. சிஎஸ்கே - ஆர்சிபி போட்டிக்கு தரமான பிட்ச்.. ஆனால் அதிக ஸ்கோர் வருவது சந்தேகமே

சார்ஜா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக ஆர்சிபி அணி போட்டுள்ள திட்டம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இரு பெரும் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருந்தாலும், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி அணி உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

ஐபிஎல் தொடரின் 2வது பகுதி ஆட்டங்களில் சிஎஸ்கே வெற்றியுடன் தொடங்கியுள்ள அதே வேளையில் ஆர்சிபி மிக மோசமான தோல்வியுடன் தொடங்கியுள்ளது. அந்த அணியின் கேப்டன் கோலி பதவி விலகுவதாகவும் அறிவித்திருப்பதால் அணிக்குள் சற்று பதற்றம் நிலவுகிறது. இப்படிபட்ட சூழலில் ஆர்சிபி கம்பேக் கொடுக்குமா அல்லது சிஎஸ்கே வெற்றி பாதையை தொடங்குமா என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சார்ஜா மைதானம்

சார்ஜா மைதானம்

இந்நிலையில் இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையிலேயே மைதானத்தை தேர்வு செய்து கொடுத்துள்ளது பிசிசிஐ. இந்த இரு அணிகளும் மோதும் போட்டி சார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. பந்துவீச்சாளர்களுக்கு இந்த மைதானம் ஒரு சாபம் என்று கூறலாம். இங்குள்ள களம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றவகையிலேயே இருக்கும். அதேவேளையில் பவுண்டரி எல்லைகளும் மிகவும் அருகில் இருக்கும். இதனால் பவுண்டரிகளை கூட அதிகளவில் பார்க்க முடியாது. அடித்தால் சிக்ஸர் மட்டும் தான் என்ற அளவில் இருக்கும்.

Recommended Video

Pakistan-க்கு எதிரான தொடரில் England எடுத்த முடிவு.. CSK-க்கு அடித்த ஜாக்பாட்
டாஸில் என்ன செய்யலாம்

டாஸில் என்ன செய்யலாம்

இன்னும் தெளிவாக இந்த மைதானம் குறித்து சொல்ல வேண்டும் என்றால், இங்கு 200 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்ஸில் அடித்தாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது. ஏனென்றால் பந்தை மெதுவாக தடவிக்கொடுத்தால் போதும், வேகத்திற்கு தானாக சிக்ஸருக்கு பறக்கும். எனவே இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்து முடிந்த அளவிற்கு எதிரணியின் ஸ்கோரை சுருட்ட பார்க்கும். அதன் பின்னர் சுலபமாக ரன் குவிக்கும்.

மைதான புள்ளிவிவரம்

மைதான புள்ளிவிவரம்

சார்ஜா மைதானத்தில் இதுவரை 56 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 36 முறை 2வதாக பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெற்றுள்ளது. 19 முறை மட்டுமே மூதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு போட்டி சமன். இங்கு அதிகபட்ச ஸ்கோர் 228/4 ஆகும். அதே போல குறைந்தபட்ச ஸ்கோர் 82/10 ஆகும். இன்றைய போட்டியில் குறைந்தது 180க்கும் மேல் ரன்கள் குவித்தால் தான் எதிரணியை தடுத்து நிறுத்த முடியும்.

ஸ்கோர் வருவதில் சிக்கல்

ஸ்கோர் வருவதில் சிக்கல்

ஆனால் அதிக ஸ்கோர் வருமா என்பது சந்தேகம் தான். ஒருவேளை ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தால் அதிரடி குறைவாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. அந்த அணியில் பட்டிக்கல், கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகிய 4 பேரை மட்டுமே பேட்டிங் வரிசை நம்பி இருக்கிறது. ஆனால் கோலியின் மனநிலை கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அதே போல மேக்ஸ்வெல்லும் கடந்த போட்டியில் பந்தை தொடுவதற்கே மோசமாக திணறினார். எனவே இவர்கள் நின்று விளையாடினால் மட்டுமே அதிக ஸ்கோர் வரும்.

Story first published: Friday, September 24, 2021, 19:30 [IST]
Other articles published on Sep 24, 2021
English summary
Sixer treat for fans is ready, CSK vs RCB match detailed Pitch report here
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X