For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டாஸிலேயே ட்விஸ்ட் கொடுத்த மும்பை.. சுக்கு நூறான எதிர்பார்ப்பு.. அதிர்ச்சி தந்த ப்ளேயிங் 11

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

14வது ஐபிஎல் தொடரின் 2ம் பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது.

 IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி - IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி -

இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தொடக்க வீரர் டூப்ளசிஸ் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பிவிட்டார். ஓப்பனிங்கில் ருத்ராஜ் கெயிக்வாட், டூப்ளசிஸ் களமிறங்குகின்றனர். பின்னர் வழக்கம் போல மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி ஆகியோர் மிடில் ஆர்டரில் களமிறங்குகின்றனர்.

சாம் கரண் இல்லை

சாம் கரண் இல்லை

பந்துவீச்சை பொறுத்தவரை 4 வேகப்பந்துவீச்சாளர்களையும் 2 ஸ்பின்னர்களையும் தோனி பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் ஸ்பின்னிங்கிற்கும், டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், ஹாசல் வுட் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். சாம் கரண் மட்டும் அணியில் இடம்பெறவில்லை. மற்றவர்கள் அனைவரும் சிக்கல்களுக்கு இடையேயும் அணியில் இடம்பெற்றுவிட்டனர்.

 ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

டூப்ளசிஸ், ருத்ராஜ் கெயிக்வாட், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், ஜாஸ் ஹாசல்வுட்

மும்பை அணி

மும்பை அணி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எந்தவித பிரச்னையும் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான ரோகித் சர்மா அணியில் இடம்பெறவில்லை. இந்த போட்டியில் கேப்டனாக கெயிரன் பொல்லார்ட் செயல்படவுள்ளார். எனவே ஓப்பனிங்கில் குயிண்டன் டிக்காக்கும், இஷான் கிஷானும் களமிறங்குகின்றனர். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், அன்மால்ப்ரீத் சிங், பொல்லார்ட் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

பவுலிங் படை

பவுலிங் படை

இதே போல முக்கிய ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சௌரப் திவாரி சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் க்ருணால் பாண்ட்யா, ஆடம் மில்ன், ராகுல் சஹார், ஜஸ்பிரித் பும்ரா ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் பந்துவீச்சில் களமிறங்குகின்றனர்.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

குயிண்டன் டிக்காக், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், அன்மால்ப்ரீத் சிங், கெயிரன் பொல்லார்ட், சௌரப் திவாரி, க்ருணால் பாண்ட்யா, ஆடம் மில்ன், ராகுல் சஹார், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

Story first published: Sunday, September 19, 2021, 19:34 [IST]
Other articles published on Sep 19, 2021
English summary
CSK won the toss against MI, Big dissappoitment for Mumbai fans in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X