For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இனி ஐபிஎல் லெவலே வேற” முதலீடு செய்ய துடிக்கும் உலகின் முன்னணி ஜாம்பவான்கள்.. காரணம் என்ன தெரியுமா

அமீரகம்: 2 புதிய ஐபிஎல் அணிகளை வாங்குவதற்காக உலகளவில் கொடிகட்டி பறக்கும் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.

Recommended Video

IPL 2022 Auction: Will Manchester United buy a new team? | OneIndia Tamil

ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் இணைக்கப்படவுள்ளதால், அதற்கான ஏலம் விடும் தேதிகளையும், விதிமுறைகளையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது.

2 புதிய அணிகளை வாங்குவதற்கான விருப்பப்படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அணிகளின் ஏலம் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்

இந்திய அணியில் தமிழக வீரர்.. ஷர்துலை அடுத்து மேலும் 2 பேர் சேர்ப்பு?.. ரசிகர்கள் உற்சாகம்! இந்திய அணியில் தமிழக வீரர்.. ஷர்துலை அடுத்து மேலும் 2 பேர் சேர்ப்பு?.. ரசிகர்கள் உற்சாகம்!

ஏலம்

ஏலம்

ஐபிஎல் தொடரில் மேலும் 2 புதிய அணிகளை சேர்ப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த 2 அணிகளையும் எந்த நிறுவனம் வாங்கப்போகிறது, எந்த நகரத்தை மையமாக கொண்டு 2 புதிய அணிகள் உருவாக்கப்படவுள்ளது என்ற தகவல்களை தெரிந்துக்கொள்வதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஏலம் விதிமுறை

ஏலம் விதிமுறை

இந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள விரும்புவோர் முதலில் ஐடிடி ( Invitation to tender) எனப்படும் விருப்பப்படிவத்தை அக்டோபர் 20 தேதிக்குள் ( கடைசி நாள்) வாங்கியிருக்க வேண்டும். இனி வரும் ஐபிஎல் போட்டிகளின் புதிய வசதிகள், விதிமுறைகள் என அனைத்து திட்டங்களும் இந்த விண்ணப்பத்தில் அடங்கியிருக்கும். இதனை ஒருவர் வாங்க வேண்டும் என்றால் தனி நபரோ அல்லது நிறுவனமோ ஆண்டுக்கு ரூ.3000 கோடி வரை வருமானம் ஈட்ட வேண்டும். அவர்கள் நுழைவுச்சீட்டை வாங்குவதற்கு ரூ.10,00,000 பணம் செலுத்த வேண்டும்.

பல்வேறு தொடர்கள்

பல்வேறு தொடர்கள்

ஃபார்முலா ஒன் உள்ளிட்ட உலகின் முன்னணி போட்டிகளை நடத்தி வரும் அமெரிக்க பண முதலீட்டு நிறுவனம் ஒன்று ஐபிஎல் அணிகள் மீது கவனம் செலுத்தியுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே ஐரோப்பாவில் உள்ள 6 நாடுகளில் ரக்பி தொடர்களில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முறை ஏலம் சற்று சூடுபிடிக்கலாம்.

உண்மை காரணம்

உண்மை காரணம்

IIT-ஐ வாங்கினாலும், ஏலத்தின் போது அந்த நிறுவனம் பங்கேற்குமா என்பது சந்தேகமே. முன்னணி நிறுவனங்கள் ஏலத்தில் கலந்துக்கொள்ளாமல் தங்களது வியாபார நோக்கத்திற்காக விண்ணப்ப படிவத்தை மட்டும் வாங்கி ஐபிஎல் திட்டங்களை தெரிந்துக்கொள்வார்கள். அதற்காக கூட வாங்கியிருக்கலாம். எது எப்படியோ வவரும் அக்டோபர் 26ம் தேதியன்று துபாயில் நடைபெறும் ஏலத்தின் போது எந்த நிறுவனம் புதிய அணிகளை வாங்குகிறது என்பது தெரியவரும்.

Story first published: Friday, October 22, 2021, 17:24 [IST]
Other articles published on Oct 22, 2021
English summary
CVC venture capital, Industry gaints aspirant on new IPL franchise in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X