மாலத்தீவில் பரபரப்பு.. மதுபாரில் அடித்துக்கொண்ட வார்னர் - ஸ்லாட்டர்? அப்படி என்ன காரணம்?

மாலத்தீவில் முகாமிட்டுள்ள ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கும் - மைக்கேல் ஸ்லாட்டருக்கும் பாரில் கைக்கலப்பு ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தவைக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இனி எப்படி ஐபிஎல் நஷ்டமாகும்.. ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ஒற்றை அறிவிப்பு.. குஷியில் முதலீட்டாளார்கள்!

இதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர்களை தவிர மற்ற அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டிற்கு திரும்பிவிட்டனர்.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலியாவில் மே 15ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல்-ல் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என 38 பேர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

மாலத்தீவில் முகாம்

மாலத்தீவில் முகாம்

இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரையும் மாலத்தீவில் தங்க வைத்துள்ளது பிசிசிஐ. மே 15ம் தேதி வரை மாலத்தீவில் அவர்கள் தனிமையில் இருந்த பிறகு, தனி விமானம் மூலம் தங்களது நாட்டுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். பயிற்சியாளர் மைக் ஹசி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைகலப்பு

கைகலப்பு

இந்நிலையில் அங்குள்ள மதுபாரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னரும், முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டருக்கும் சண்டையிட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அது கைகலப்பாக மாறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உண்மை என்ன?

உண்மை என்ன?

இந்நிலையில் வார்னர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர், நானும் மைக்கேல் ஸ்லாட்டரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் சண்டை வருவதற்கான வாய்ப்பே இல்லை. இதுமாதிரியான தகவல்கள் எங்கிருந்துதான் வருகிறது என எனக்கு தெரிய வில்லை. சரியான ஆதராம் இல்லாமல் எதையும் யாரும் கூறக்கூடாது என தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
David Warner Deny to rumours of exchanging blows in a Maldives bar
Story first published: Sunday, May 9, 2021, 15:09 [IST]
Other articles published on May 9, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X