For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னர் இனி ஐபிஎல்-ல் இல்லை.. வெளிப்படையாக போட்ட ட்வீட்.. உண்மையை கூறிய அணி பயிற்சியாளர்!

அமீரகம்: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு வாய்ப்பு கிடையாது என பயிற்சியாளர் ட்ரீவோர் பேலிஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

SRH vs RR போட்டியின் போதே வெளியேறிய David Warner.. முடிவுக்கு வருதா நீண்ட பயணம் ?

இந்தாண்டு ஐபிஎல் தொடர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு மிக மோசமான சீசனாக அமைந்துள்ளது.

இதுவரை அந்த அணி விளையாடியுள்ள 10 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்விகளுக்கு காரணம் வார்னரை அந்த அணி புறக்கணிப்பதே காரணம் எனக் கூறப்படுகிறது.

சன்ரைசர்ஸ் அணி

சன்ரைசர்ஸ் அணி

ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வந்த ஐதராபாத் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று கோப்பையையும் வென்று கொடுத்தவர் டேவிட் வார்னர். ஆனால் இந்த ஆண்டு அணி நிர்வாகத்திற்கும் வார்னருக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் டேவிட் வார்னரும் ஒதுக்கப்பட்டு வருகிறார்.

ஓரம்கட்டப்பட்ட வார்னர்

ஓரம்கட்டப்பட்ட வார்னர்

இதற்கு வார்னரின் மோசமான ஃபார்மும் காரணமாக கூறப்படுகிறது. இந்தாண்டு 8 போட்டிகளில் விளையாடிய அவர் 185 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். ஆனால் அனுபவ வீரர் என்றும் பாராமல் அவரை உட்காரவைப்பது சரியல்ல என்று ரசிகர்கள் கூறிவந்தனர். அதற்கேற்றார் போல ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வார்னருக்கு பதிலாக ஜேசன் ராய் சேர்க்கப்பட்டார். ராயும் தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக விளையாடி முடித்தார்.

வார்னரின் கமெண்ட்

வார்னரின் கமெண்ட்

இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல்-ல் இனி ஐதராபாத் அணிக்காக டேவிட் வார்னர் களமிறங்கமாட்டார் எனத் தெரியவந்துள்ளது. நேற்றைய போட்டியின் போது, ரசிகர் ஒருவர் 'யாராவது டேவிட் வார்னரை பார்த்தீர்களா?' என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதற்கு ரிப்ளை செய்த வார்னர் 'இனிமேல் என்னைப் பார்க்க முடியாமல் கூட போகலாம். எனினும் தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என பதிவிட்டிருந்தார். இதனால் வார்னர் இனி வரும் போட்டிகளில் இல்லாதது உறுதியாகியுள்ளது.

அணியின் விளக்கம்

அணியின் விளக்கம்

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஐதராபாத் அணி பயிற்சியாளர், ஐதராபாத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாது என்பது தெரிந்துவிட்டது. எனவே, அணியில் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் உள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக வார்னர் உட்காரவைக்கப்பட்டார். அவரை மட்டும் புறக்கணிக்கவில்லை. அவருடன் சேர்ந்து ஜாதவ் உள்ளிட்ட வீரர்களும் தான் ஹோட்டலில் அமரவைக்கப்பட்டனர்.

சூசகம்

சூசகம்

அடுத்துவரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக அனுபவ வீரர்களை அமரவைப்போம். அதற்கான வேலையில் இருக்கிறோம். அடுத்துவரும் போட்டிகளில் வார்னர் பார்வையாளரகவே தொடர்ந்து, இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவார். டேவிட் வார்னர் ஐதராபாத் அணிக்காக நிறைய செய்துள்ளார். அவரின் பங்களிப்பை மதிக்கிறோம். மெகா ஏலத்திற்குள் அனைத்தையும் சரி செய்ய விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, September 28, 2021, 16:05 [IST]
Other articles published on Sep 28, 2021
English summary
David Warner indirectly indicates that his Last Appearance for SRH in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X