For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிய அவுட் பண்ண இவ்ளோ சிம்பிள் ப்ளானா.. பண்ட்-ன் சாமார்த்தியம்.. இளம் பவுலர் கூறிய சுவாரஸ்ய தகவல்!

மத்திய பிரதேசம்: சிஎஸ்கே கேப்டன் தோனியின் விக்கெட்டை கைப்பற்றுவதற்கு பின்னால் நடந்த சுவாரஸ்ய நிகழ்வை இளம் வீரர் ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆவேஷ் கான், டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சீனியர் வீரர் உமேஷ் யாதவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார்.

ஒருதலைபட்சமா? ஆண்கள் அணிக்கு மட்டும் முக்கியத்துவம்.. சிக்கலில் சிக்கிய கங்குலி.. விளக்கம் என்ன? ஒருதலைபட்சமா? ஆண்கள் அணிக்கு மட்டும் முக்கியத்துவம்.. சிக்கலில் சிக்கிய கங்குலி.. விளக்கம் என்ன?

அவரின் ஆட்டம் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆவேஷ் கான் தான் இந்த சீசனில் அதிகம் கவனிக்கப்பட்ட வீரர் என முன்னாள் வீரர் சேவாக் புகழ்ந்து தள்ளினார்.

அசத்தல்

அசத்தல்

மொத்தம் 8 போட்டிகளில் ஆடிய ஆவேஷ் கான், 14 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்த 2வது வீரராக திகழ்கிறார். இந்நிலையில் இவர் தோனியின் விக்கெட்டை எடுக்க பண்ட் போட்ட ஸ்கெட்ச் குறித்து பேசியுள்ளார்.

தோனியின் அவுட்

தோனியின் அவுட்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்தாண்டின் முதல் போட்டியாக சென்னை அணியை எதிர்கொண்டது. இதில் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவரை டக் அவுட்டாகி பெவிலியன் அனுப்பினார் ஆவேஷ் கான். அவர் வீசிய பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது.

பண்ட்-ன் ஸ்கெட்ச்

பண்ட்-ன் ஸ்கெட்ச்

இதுகுறித்து தற்போது பேசிய அவர், ஆட்டத்தில் சில ஓவர்களே மீதம் இருந்தது. அப்போது தோனி கண்டிப்பாக அடித்துதான் ஆடுவார் என பண்ட்-க்கு தெரிந்தது. தோனி நீண்ட நாட்களாக விளையாடாததால் அதிரடி காட்டுவது கடினம் என்றும் பண்ட்-க்கு தெரிந்திருந்தது. எனவே அவர் என்னிடம் ஷார்ட் பாலாக போட சொன்னார். நானும் அதையே செய்தேன். கூறியதை போலவே தோனி அடித்து ஆட முயன்று இன்சைடு எட்ஜால் பவுல்ட் ஆனார்.

புத்திசாலித்தனம்

புத்திசாலித்தனம்

நான் பந்துவிச ஓடி வரும் போது, நான் கீப்பிங்கில் இருக்கும் பண்ட்-ஐ மற்றுமே பார்த்துகொண்டு இருப்பேன். பேட்ஸ்மேன் நான் என்ன பந்தை வீசப்போகிறேன் என என்னை மட்டுமே பார்ப்பார் வேறு எதையும் கவனிக்கமாட்டார். அந்த நேரத்தில் பண்ட்-க்கும் எனக்கும் எது போன்று பந்துவீசுவது என ரகசிய உடல்மொழி இருக்கும். அவர் யார்க்கர் போடச்சொன்னாலும் சரி, அவுட்சைட் போட சென்னாலும் சரி எங்களுக்கு ரகசிய உடல்மொழி உள்ளது எனத்தெரிவித்தார்.

Story first published: Monday, May 10, 2021, 22:56 [IST]
Other articles published on May 10, 2021
English summary
DC Bowler Avesh Khan reveals how he and Pant planned to get Dhoni wicket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X