For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொரோனா டெஸ்டில் நடந்த தவறு.. தேவையின்றி தனிமைப்படுத்த பட்ட ஸ்டார் ப்ளேயர்.. கோபத்தில் டெல்லி அணி!

மும்பை: கொரோனா பரிசோதனையில் வெளியான தவறான முடிவால் நேற்றைய போட்டியில் முக்கிய வீரரை இழந்திருக்கிறது டெல்லி அணி.

Recommended Video

Delhi Capitals அணியில் இடம்பெற்ற இளம் வீரர்.. யார் இந்த Lalit Yadav

டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா உறுதியானதாக அறிவிக்கப்பட்ட பவுலர் ஆண்ட்ரிக் நார்ட்ஜே தனிமைப்படுத்துதல் காலத்திற்கு முன்பாகவே அணியுடன் இணைந்துள்ளதார். இது அந்த அணிக்கு அடுத்தப்போடிக்கான நம்பிக்கை அளித்துள்ளது.

இஷாந்த் சர்மாவுக்கு காயம்... அவரோட இடத்தை ஆவேஷ் கான் கப்புன்னு புடிச்சுக்கிட்டாரு... பாண்டிங் பரபர!இஷாந்த் சர்மாவுக்கு காயம்... அவரோட இடத்தை ஆவேஷ் கான் கப்புன்னு புடிச்சுக்கிட்டாரு... பாண்டிங் பரபர!

இந்தியா வருகை

இந்தியா வருகை

டெல்லி கேபிடல்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரபாடாவும், ஆன்ரிச் நார்ட்ஜேவும் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களாக பார்க்கப்படுகின்றனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டு இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடருக்காக வருகை தந்தனர்.

முதல் பரிசோதனை

முதல் பரிசோதனை

இதில் இருவருக்கும் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என்றுதான் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அணியின் பபுளுக்கு செல்வதற்கு முன்னர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு 3 முறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற பிசிசிஐ வழிகாட்டுதலின் படி தனிமைப்படுத்தப்பட்டனர்.

தொற்று உறுதி

தொற்று உறுதி

இதனிடையே தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நார்ட்ஜேவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மூலம் கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் பங்குபெற முடியவில்லை.

மீண்டும் பரிசோதனை

மீண்டும் பரிசோதனை

இந்நிலையில் அவருக்கு நிஜமாகவே கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. அவருக்கு இன்று எடுக்கப்பட்ட 3வது பரிசோதனையின் முடிவில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும். தவறான பரிசோதனை முடிவு காரணமாக 2 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார் எனவும் அந்த அணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதே போல அணியின் பபுளிலும் இணைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் நார்ட்ஜே இருந்திருந்தால் பெரிய உதவியாக இருந்திருக்கும். ஆனால் தவறான கொரோனா முடிவால் அவர் தனிமைப்படுத்தப்பட்டதற்கு டெல்லி அணி கோபமாக உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி அணிக்கு பலம்

டெல்லி அணிக்கு பலம்

இதுகுறித்து பேசியுள்ளா நார்ட்ஜே, ரூமுக்கு வெளியே வந்து அனைவருடனும் சேர்ந்து காலை உணவு உண்டது மகிழ்ச்சியாக உள்ளது. இன்று முதல் பயிற்சி மேற்கொள்ள ஆர்வமுடன் உள்ளேன். அதே போல மீண்டும் ஐபிஎல் களத்தில் விளையாடுவதை எதிர்நோக்கியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். நார்ட்ஜே கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டவர் ஆவார். எனவே டெல்லி அணியின் அடுத்த போட்டியில் இவரை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

Story first published: Friday, April 16, 2021, 17:26 [IST]
Other articles published on Apr 16, 2021
English summary
DC's Star Player Nortje Nortje Comes out of quarantine after false COVID-19 scare
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X