நேராக சென்று.. "அவரின்" காலிலேயே விழுந்த சிஎஸ்கே வீரர்.. வைரலாகும் புகைப்படம்.. என்ன நடந்தது?

சென்னை: நேற்று பஞ்சாப்பிற்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டிக்கு முன் சிஎஸ்கே வீரர் சாகர் செய்த காரியம் ஒன்று பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Punjab Kingsஐ பஞ்சர் ஆக்கிய Super kings | CSK won by 6 Wickets | Oneindia Tamil

நேற்று சென்னைக்கும் பஞ்சாப்பிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. தொடக்கத்தில் இருந்த சிஎஸ்கே அணிதான் வெற்றிபெறும் என்று சொல்லும் அளவிற்கு அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தது.

முக்கியமாக சிஎஸ்கே அணியின் சாகர் நேற்று சிறப்பாக பவுலிங் செய்தார். முதல் பந்தில் இருந்தே சாகர் பஞ்சாப் அணிக்கு அழுத்தம் கொடுத்தார்.

மோசம்

மோசம்

சாகர் கடந்த இரண்டு வருடமாக சரியான பார்மில் இல்லை. கடந்த சீசனில் பெரிய அளவில் விக்கெட்டுகள் எடுக்கவில்லை. அதேபோல் இவரின் பவுலிங்கும் பெரிய அளவில் சிறப்பான இல்லை, சரியான லைன் மற்றும் லென்தில் பவுலிங் செய்ய முடியாமல் இவர் கஷ்டப்பட்டார்.

நேற்று

நேற்று

இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் சாகர் மொத்தமாக பார்மிற்கு திரும்பினார். இவர் பொதுவாக பவர் பிளேவில் மட்டுமே 2-3 ஓவர் வீசுவார். பின்னர் இன்னொரு ஓவரை கடைசியில் வீசுவார். ஆனால் நேற்று இவர் சிறப்பாக பவுலிங் செய்ததை அடுத்த பவர் பிளே முடிந்த பின் அடுத்த ஓவரே இவருக்கு மீண்டும் வழங்கப்பட்ட்டது.

ஓவர்

ஓவர்

இதிலும் சாகர் ஒரு விக்கெட் எடுத்தார். நேற்று மொத்தம் 4 ஓவர் வீசிய சாகர் 4 விக்கெட் எடுத்தார். வெறும் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்த போட்டிக்கு முன் சாகர் நேராக சென்று ஷமியின் காலில் விழுந்தார். சாகர் இந்திய டி 20 அணியில் ஆடும் போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஷமி.

ஷமி

ஷமி

பாஸ்ட் பவுலிங்கில் அனுபவம் வாய்ந்த ஷமி பல நுணுக்கங்களை சங்கருக்கு வழங்கி உள்ளார். கிட்டத்தட்ட சாகருக்கு ஷமி குரு போல தொடக்க காலத்தில் செயல்பட்டார். முக்கியமாக ஷமிதான் சாகரின் ஸ்விங் வேலை செய்யாத சமயங்களில் அவருக்கு உதவி இருக்கிறார்.

சிறப்பு

சிறப்பு

சாகரின் ஸ்விங் பவுலிங்கை மெருகேற்றியதில் ஷமியின் பங்கும் உள்ளதுஇதனால் நன்றி மறக்காத நேற்று சமியை பார்த்ததும் அவரின் காலில் விழுந்து மரியாதை செய்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Deepak Chahar pays respect to Shami by falling on his leg yesterday
Story first published: Saturday, April 17, 2021, 11:09 [IST]
Other articles published on Apr 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X