For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொரோனா பாசிட்டிவ் வந்த அந்த ஒரு தருணம்... சிஎஸ்கேவில் என்ன நடந்தது.. உண்மையை பகிர்ந்த தீபக் சஹார்!

உத்தரபிரதேசம்: சிஎஸ்கே அணியில் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தபோது எப்படி இருந்தது என்ற அனுபவத்தை தீபக் சஹார் மனம் திறந்துள்ளார்.

மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட்டு வந்த ஐபிஎல் அணிகளுக்குள் கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால பாதிக்கப்பட்ட பிரபல வீரரின் தந்தை... நன்றி சொன்ன வீரர் கொரோனாவால பாதிக்கப்பட்ட பிரபல வீரரின் தந்தை... நன்றி சொன்ன வீரர்

இதனையடுத்து தொடரில் பங்கேற்றிருந்த அதிகப்படியான வீரர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று சேர்ந்துள்ளனர்.

சிஎஸ்கேவில் கொரோனா

சிஎஸ்கேவில் கொரோனா

இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்த சென்னை அணியில் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி, பவுலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி, பேருந்து ட்ரைவர் என 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கேப்டன் தோனிக்கு என்ன ஆனது, மற்ற வீரர்களின் நிலை என்ன என ரசிகர்கள் பதற்றமடைந்தனர். பின்னர் அவர்களுக்கு ஒன்றும் இல்லை நலமுடன் இருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்தவுடன் தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

அந்த தருணம்

அந்த தருணம்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தீபக் சஹார், கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்தவுடனேயே, அணி நிர்வாகம் எங்களை தனிமைப்படுத்திக்கொள்ள கூறியது. பின்னர் அதற்கு அடுத்த நாட்களில் எங்களுக்கு பரிசோதனை செய்ப்பட்டது. அதில் நெகட்டிவ் என வந்தவுடன் தான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.

விதிமுறைகள்

விதிமுறைகள்

அணியில் 3 பேருக்கு பாசிட்டிவ் என வந்தவுடன் எந்த ஒரு வீரரும் பதற்றப்படவில்லை. அனைவரும் அந்த நிலைமையை சிறப்பாக கையாண்டனர். எங்கள் அணியின் பயோ பபுள் விதிமுறைகள் மீறப்படவில்லை. மிகவும் கண்டிப்புடன் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. எனினும் எப்படி கொரோனா உள்ளே நுழைந்தது, எங்கு தவறு நடந்தது என தெரியவில்லை.

எல்லாமே மக்களுக்காக தான்

எல்லாமே மக்களுக்காக தான்

இதுபோன்ற பயோபபுள் சூழலில் ஐபிஎல் தொடர் நடத்துவது கடினம். எனினும் தற்போதைய நிலைமைக்கு ஐபிஎல் தொடர் முக்கியமான ஒன்று. அதிகப்படியான கஷ்டங்களை பொதுமக்கள் அனுபவித்து வருகின்றனர். மக்களுக்காகதான் நாங்கள் விளையாடினோம். அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக சிறிது நேரமாவது ஐபிஎல் இருந்திருக்கும்.

Story first published: Friday, May 7, 2021, 16:42 [IST]
Other articles published on May 7, 2021
English summary
Deepak Chahar's Explanation on positive Corona cases at CSK camp
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X