வீரர்கள் இடையே கடும் பதற்றம்.. கொரோனா பீதி.. உண்மையை உடைத்த டெல்லி கோச் பாண்டிங்.. முழு பின்னணி

டெல்லி: டெல்லி அணியில் ஆடும் வீரர்கள் எல்லோரும் எப்போதும் கொரோனா குறித்து மட்டுமே பேசிக்கொண்டு இருப்பதாக அணியின் பயிற்சியாளர் பாண்டிங் தெரிவித்துள்ளார்.

வெள்ளி விழா பாத்துருக்காரு ஏபிடீ... 25 விருதுகளை தட்டித் தூக்கியிருக்காரு... மிகச்சிறப்பு!

2021 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆட்டமும் கடைசி நொடி வரை விறுவிறுப்பாக சென்றாலும் ஏனோ இந்த வருட ஐபிஎல்லே மொத்தமாக களையிழந்து காணப்படுகிறது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா கேஸ்களால் ஐபிஎல் மீதான ஆர்வம் மக்களுக்கு மொத்தமாக குறைந்துள்ளது. மக்களுக்கு மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் ஆடும் வீரர்களுக்கு கூட இந்த முறை ஆட்டம் மீது பெரிய ஆர்வம் இல்லை என்கிறார்கள்.

தகவல்

தகவல்

டெல்லி அணியில் ஆடும் வீரர்கள் எல்லோரும் கிரிக்கெட்டை விட அதிகமாக கொரோனா குறித்து மட்டுமே பேசிக்கொண்டு இருப்பதாக அணியின் பயிற்சியாளர் பாண்டிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், டெல்லி அணியில் ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா உள்ளது. அஸ்வினும் வெளியேறிவிட்டார்.

அஸ்வின்

அஸ்வின்

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று அஸ்வினும் வெளியேறிவிட்டார். இதனால் இளம் வீரர்கள் கடும் மனஉளைச்சலில் இருக்கிறார்கள். கொரோனா பரவல் குறித்துதான் அவர்கள் எப்போதும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வேறு விஷயம் எதையும் அவர்கள் பேசவில்லை.

இந்தியா

இந்தியா

இந்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வருகிறது. ஆனாலும் வெளியில் வரும் கேஸ்கள் வீரர்களை நிலைகுலைய வைத்துள்ளது. முக்கியமாக மற்ற அணிகளை விட டெல்லி அணியில் இருக்கும் வீரர்கள்தான் இதை பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள். அவர்களின் மனநிலையை கொரோனாதான் ஆக்கிரமித்துள்ளது.

ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு

வெளியே நடக்கும் விஷயங்கள் குறித்து மட்டுமே நாங்கள் சிந்தித்திக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் பாதுகாப்பாக இருந்தாலும், மனரீதியாக கொரோனாவே எங்களை ஆக்கிரமித்துள்ளது, என்று பாண்டிங் குறிப்பிட்டுள்ளார். டெல்லி அணியின் வீரர் அக்சர் பட்டேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Delhi player are talking and thinking more about Covid 19 says Coach Ponting.
Story first published: Wednesday, April 28, 2021, 12:07 [IST]
Other articles published on Apr 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X