"இதை மட்டும் சரியா பண்ணு".. நடராஜனுக்கு உதவிய தோனியின் அட்வைஸ்.. "அன்று" உண்மையில் நடந்தது என்ன?

சென்னை; சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி குறித்து ஹைதராபாத் அணியில் ஆடும் தமிழக அரசு நடராஜன் முக்கியமான விஷயம் ஒன்றை பகிர்ந்து உள்ளார் .

ஹைதராபாத் அணியில் ஆடும் தமிழக அரசு நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார். கடந்த சீசனில் 73 யார்க்கர்களை வீசிய நடராஜன் பெரிய அளவில் கவனம் ஈர்த்தார்.

இந்த சீசனில் சிறப்பாக ஆடிய நடராஜன் அதன்பின் இந்திய அணியிலும் அறிமுகம் ஆனார். இந்திய அணியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக மிக சிறப்பாக ஆடிய நடராஜன் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார்.

என்ன

என்ன

கடந்த சீசனில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய நடராஜன் அப்போது ரசல், தோனி, டி வில்லியர்ஸ் போன்ற முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்தார். மிக முக்கியமான வீரர்கள் எல்லோரையும் யார்க்கர் மூலம் அவுட்டாக்கினார். இதில் தோனியின் விக்கெட்டை எடுத்த பின், போட்டிக்கு பின் தோனியும் நடராஜனும் நீண்ட நேரம் உரையாடினார்கள்.

நடராஜன்

நடராஜன்

தோனியிடம் கடந்த சீஸனின் போது பேசியது என்ன என்று நடராஜன் தற்போது விளக்கி உள்ளார். அதில், அந்த போட்டிக்கு பின் தோனி என்னிடம் நீண்ட நேரம் பேசினார் . என்னுடைய பவுலிங் குறித்து சில அறிவுரைகளை வழங்கினார். எனக்கு அது உதவியாக இருந்தது.

 பிட்னஸ்

பிட்னஸ்

என்னுடைய பிட்னஸ் குறித்து தோனி பேசினார். அவரிடம் பேசுவதே பெரிய விஷயம். அன்றைய நாள் எனக்கு மிகவும் சிறப்பாக இருந்தது . அனுபவம் கிடைக்க கிடைக்க நீ இன்னும் சிறப்பாக பவுலிங் செய்வாய் என்று கூறினார்.

ஸ்லோ பால்

ஸ்லோ பால்

என்னிடம் நிறைய ஸ்லோ பால் பவுன்சர், கட்டர்களை போடும்படி தோனி அறிவுரை வழங்கினார். இதை மட்டும் சரியா செய் என்றார். அவரின் அறிவுரை எனக்கு பெரிய அளவில் உதவியாக இருந்தது என்று நடராஜன் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் யார்க்கர்களை அதிகம் வீசிய நடராஜன் அதன்பின் இந்திய அணியில் நன்றாக பவுலிங் செய்தார். என்னிடம் நிறைய ஸ்லோ பால் பவுன்சர், கட்டர்களை போடும்படி தோனி அறிவுரை வழங்கினார். இதை மட்டும் சரியா செய் என்றார். அவரின் அறிவுரை எனக்கு பெரிய அளவில் உதவியாக இருந்தது என்று நடராஜன் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் யார்க்கர்களை அதிகம் வீசிய நடராஜன் அதன்பின் இந்திய அணியில் நன்றாக பவுலிங் செய்தார்.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியில் நடராஜன் ஆடும் போது மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். யார்க்கர் மட்டுமின்றி பல்வேறு வகையான பந்துகளை வீசினார். இதற்கு தோனியின் அறிவுரைதான் காரணமாக இருந்தது என்று நடராஜன் இப்போது கூறியுள்ளார் .

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Dhoni's advice helped me a lot, Tamilnadu player Natarajan recalls last year's match.
Story first published: Thursday, April 8, 2021, 10:50 [IST]
Other articles published on Apr 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X