4 ஓவர்களில் ஆட்டம் மாறியது எப்படி.. தோனியின் ப்ளானுக்கு பின்னால் இருந்த பிராவோ.. முழு விளக்கம்!

சார்ஜா: சாம் கரண் நல்ல ஃபார்மில் இருக்கும் போது டுவைன் பிராவோவை அணிக்குள் கொண்டு வந்த தோனி சுவாரஸ்ய விஷயங்களை நடத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டம் முழுவதும் ஒரே கவலை.. அந்த ஒரு விஷயம் நடக்கவில்லை.. போட்டிக்கு பின்னர் தோனி நிம்மதி பெருமூச்சுஆட்டம் முழுவதும் ஒரே கவலை.. அந்த ஒரு விஷயம் நடக்கவில்லை.. போட்டிக்கு பின்னர் தோனி நிம்மதி பெருமூச்சு

இதில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 156/6 ரன்களை எடுத்தது. பின்னர் விளையாடிய சிஎஸ்கே 157/4 எடுத்து அபார வெற்றி பெற்றது.

தோனியின் மாஸ்டர் ப்ளான்

தோனியின் மாஸ்டர் ப்ளான்

இந்த போட்டியில் ஆர்சிபி அணி அதிக ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்கும் சூழல் நிலவி வந்தது. ஆனால் அவை அனைத்தையும் மாஸ்டர் ப்ளானின் மூலம் தவிடுபொடி ஆக்கினார் எம்.எஸ்.தோனி. ஆர்சிபி அணியில் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி (53) படிக்கல் (70) இருவருமே அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினர். இதனால் முதல் விக்கெட்டிற்கு அந்த ஜோடி 13 ஓவர்களில்

110 ரன்களை சேர்த்தது. சேர்த்தது. இதனால் அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடி காட்டி 190க்கும் அதிகமான ரன்களை சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

சிஎஸ்கே அபார வெற்றி

சிஎஸ்கே அபார வெற்றி

ஆனால் 14வது ஓவரில் இருந்து பவுலிங்கில் ட்விஸ்ட் கொடுத்தார் தோனி. ஜடேஜா மற்றும் ஷர்துல், டுவைன் பிராவோவை வைத்து ஆர்சிபியின் ஸ்கோரை அடியோடு குறைத்தார். இதனால் கடைசி 4 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்களை இழந்து 25 ரன்களை மட்டுமே எடுத்தது. பின் வரிசையில் வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பினர். இதுதான் ஆட்டத்தில் திருப்புமுணை ஏற்படுத்தியது.

தோனி விளக்கம்

தோனி விளக்கம்

இந்நிலையில் தனது பவுலிங் திட்டம் குறித்து பேசிய கேப்டன் தோனி, ஆர்சிபி சிறப்பான தொடக்கட்தை கொடுத்திருந்தது தந்தது. இருப்பினும், 9 ஓவர்களுக்குப் பிறகு பிட்ச் ஸ்லோவாக மாறியது. எனவே ரன்கள் பெரியளவில் போகவில்லை.

ஜடேஜா சிறப்பாக பந்துவீசினார். குறிப்பாக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பட்டிக்கலை நிறுத்துவதற்கு ஜடேஜா உதவினார்.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

பிராவோவை கொண்டு வந்ததற்கு பெரும் திட்டம் இருந்தது. டிரிங்க்ஸ் பிரேக்கின்போது, மொயின் அலியிடம், நீங்கள் தான் பந்துவீச வேண்டும் எனக் கூறியிருந்தேன். ஆனால் அதன்பிறகு முடிவினை மாற்றக்கொண்டு பிராவோவை கொண்டுவந்தேன். இந்த கண்டிஷனில் தொடர்ந்து நான்கு ஓவர்களை போடுவது கடினம். அதனால்தான், பிராவோவை முன்கூட்டியே கொண்டு வந்தேன். அது நல்ல பலன் தந்தது. ரன்களும் கட்டுக்குள் வந்தது ஒரு வேளை பிராவோவை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் சிக்கல் ஆகியிருக்கும்.

பிராவோவின் வித்தியாச பந்துகள்

பிராவோவின் வித்தியாச பந்துகள்

டுவைன் பிராவோ நன்கு ஃபிட்டாக உள்ளார். அணியின் திட்டங்களை கட்சிதமாக செயல்படுத்துகிறார். அவரை நானும் அவரும் சகோதரர்களை போன்று தான் பேசிக்கொள்வோம். சில சமயங்களில் அவர் ஸ்லோ பால்களை தான் போட வேண்டும் என்பதற்காக சண்டையிட்டுக் கொள்வோம். ஆனால் தற்போது அவர் ஸ்லோ பால் போடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. எனவே நேற்றைய போட்டியில் ஓவரின் 6 பந்துகளையும் 6 விதமாக போடச்சொல்லி கூறினேன். அதனை சிறப்பாக செய்து முடித்தார் என தோனி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CSK Skipper Dhoni Explains the Bravo's Execution in middle overs against RCB
Story first published: Saturday, September 25, 2021, 11:37 [IST]
Other articles published on Sep 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X