For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை கவர்ந்த அந்த தமிழக வீரர்.. போட்டிக்கு பின் விறுவிறுவென அருகில் சென்று.. ப்பா இதுதான் தல!

சென்னை: நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியில் ஆடும் தமிழக வீரர் ஷாருக்கானின் ஆட்டம் கேப்டன் தோனியை பெரிதும் கவர்ந்து இருக்கிறது.

Recommended Video

தமிழக வீரர் Shahrukh Khan-க்கு அறிவுரை வழங்கிய Dhoni.. வைரலாக புகைப்படம்

நேற்று பஞ்சாப்பிற்கும் சென்னைக்கும் இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. தொடக்கத்திலேயே பஞ்சாப் 5 அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணி மாஸ் காட்டியது.

பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எல்லோரும் சீட்டு கட்டு போல நேற்று சரிந்தனர். பஞ்சாப் அடித்த 106 ரன்களை சிஎஸ்கே வெறும் 15.3 ஓவர்களிலேயே எடுத்து வெற்றிபெற்றது.

எப்படி

எப்படி

நேற்று பஞ்சாப் அணியில் தமிழக வீரர் ஷாருக்கான் மட்டுமே நன்றாக ஆடினார். 36 பந்தில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி என்று 47 ரன்கள் எடுத்து ஷாருக்கான் அவுட் ஆனார். ஷாருக்கான் இதன் மூலம் தன்னை சிறந்த பினிஷர் என்று நிரூபித்துள்ளார்.

அரைசதம்

அரைசதம்

மற்ற பஞ்சாப் வீரர்கள் எல்லோரும் அவுட்டான போது வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஷாருக்கான் மட்டும் சிறப்பாக ஆடினார். இவரின் விக்கெட்டை மட்டும் எடுக்க முடியாமல் சிஎஸ்கே வீரர்கள் கடுமையாக திணறினார்கள்.

திணறல்

திணறல்

நேற்று நடந்த போட்டியில் ஷாருக்கானின் ஆட்டம் கேப்டன் தோனியை பெரிதும் கவர்ந்து இருக்கிறது. முக்கியமாக இவர் அடித்த இரண்டு சிக்ஸர்கள், இவர் எவ்வளவு பெரிய ஹிட்டர் என்பதை உணர்த்தி உள்ளது. நேற்று போட்டிக்கு பின் ஷாருக்கானை நேராகவே சென்று தோனி சந்தித்தார்.

பாராட்டு

பாராட்டு

ஷாருக்கானிடம் அவரின் ஆட்டம் குறித்து பேசி தோனி பாராட்டினார். அதோடு ஷாருக்கானுக்கு தோனி சில டிப்ஸ்களையும் வழங்கி உள்ளார். பொதுவாக தல தோனி இளம் வீரர்கள் நன்றாக ஆடினால் அவர்களை பாராட்டுவார். அதேபோல் நேற்றும் ஷாருக்கானை தோனி பாராட்டி அறிவுரைகளை வழங்கினார்.

Story first published: Saturday, April 17, 2021, 11:14 [IST]
Other articles published on Apr 17, 2021
English summary
IPL 2021: Dhoni meets and greets TN player Shah Rukh Khan for his Punjab innings against CSK
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X