For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவில் எதிர்பாராத மாற்றம் வரும்.. அவரை தூக்கிடுங்க.. தோனி எடுக்க வேண்டிய கசப்பான முடிவு!

சென்னை: சிஎஸ்கேவில் இருக்கும் டாப் ஆர்டர் வீரர்கள் எல்லோரும் பார்மிற்கு திரும்பி உள்ள நிலையில் கேப்டன் தோனி கசப்பான முடிவு ஒன்றை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

2021 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ள நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னா அடி... மேஜிக்கை தொடரும் அக்சர்... 5 விக்கெட்டுகள் சாதனையில் ஹாட்ரிக்! இன்னா அடி... மேஜிக்கை தொடரும் அக்சர்... 5 விக்கெட்டுகள் சாதனையில் ஹாட்ரிக்!

2021 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி 6 வீரர்களை எடுத்தது. ஏலத்திற்கு முன்பாக ராபின் உத்தப்பாவை டிரான்ஸ்பர் முறை மூலம் சிஎஸ்கே வாங்கியது.

 சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கேவில் இருக்கும் டாப் ஆர்டர் வீரர்கள் எல்லோரும் பார்மிற்கு திரும்பி உள்ள நிலையில் கேப்டன் தோனி கசப்பான முடிவு ஒன்றை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். தற்போது சிஎஸ்கேவின் ஓப்பனிங் வீரராக இருக்கும் ரூத்துராஜ் சிறப்பாக ஆடி வருகிறார். சையது முஷ்டாக், விஜய் ஹசாரே இரண்டிலும் இவர் சிறப்பாக ஆடி வருகிறார்.

ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா

இன்னொரு பக்கம் ராபின் உத்தப்பா தொடர்ந்து முழு பார்மில் இருக்கிறார். இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு சதம், ஒரு போட்டியில் 80+ ரன்களை எடுத்து அசத்தி உள்ளார். இவரும் நல்ல பார்மில் இருக்கிறார்.

டு பிளசிஸ்

டு பிளசிஸ்

இன்னொரு பக்கம் டு பிளசிஸ் தன்னுடைய வாழ்நாள் பார்மில் இருக்கிறார். டெஸ்டில் ஓய்வு பெற்றுள்ளதால் கண்டிப்பாக டி 20 போட்டிகளில் இவர் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போக ஜெகதீசன் போன்ற வீரர்கள் சிறப்பாக ஆடி நல்ல பார்மில் இருக்கிறார்கள்.

டாப் ஆர்டர்

டாப் ஆர்டர்

இதனால் டாப் ஆர்டரில் ஆடும் அம்பதி ராயுடுவை தோனி பிளேயிங் 11ல் எடுக்க வேண்டுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இவர் தற்போது பார்மில் இல்லை. முதல் தர போட்டிகளில் சரியாக ஆடவில்லை. கடந்த வருட ஐபிஎல் சீசனிலும் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை.

ராயுடு

ராயுடு

தற்போது சிஎஸ்கே டாப் ஆர்டரில் இவர் மட்டும்தான் சரியாக ஆடவில்லை. இதன் காரணமாக இவரை தோனி அணியில் சேர்க்காமல் ராபின் உத்தப்பாவிற்கு வாய்ப்பு வழங்கலாம். ராபின் உத்தப்பாவின் பார்மை பயன்படுத்திக் கொண்டு அவர் மிடில் ஆர்டரில் களமிறக்கலாம்.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

ராயுடுவை அணியில் இருந்து எடுப்பது கசப்பான முடிவாக இருக்கலாம். ஆனாலும் அவரை நீக்கினால் டாப் ஆர்டரில் டு பிளசிஸ், ரூத்துராஜ், ரெய்னா, உத்தப்பா, தோனி, ஜடேஜா, மொயின், பிராவோ, சாம் கரன் ஆகியோர் களமிறங்க முடியும். இது சிஎஸ்கே அணிக்கு வலிமையை கொடுக்கும்.

Story first published: Friday, February 26, 2021, 20:33 [IST]
Other articles published on Feb 26, 2021
English summary
IPL 2021: Dhoni should go with Robin Uththappa instead of using Rayudu in CSK in the playing 11.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X