For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"டிராப் பிளான்".. கடப்பாரை டீம் மும்பையையே திணறடித்த கேகேஆர் பவுலிங்.. எப்படி சாத்தியமானது? பின்னணி

சென்னை: மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா பவுலர்கள் நினைத்ததை விட சிறப்பாக பவுலிங் செய்துள்ளனர்.

மும்பைக்கும் கொல்கத்தாவிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த கொல்கத்தா தொடக்கத்தில் இருந்து திட்டமிட்டு பவுலிங் செய்து வருகிறது.

முக்கியமாக இயான் மோர்கன் முறையாக திட்டமிட்டு, ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஏற்றபடி திட்டங்களை வகுத்து இருக்கிறார். கடப்பாரை டீம் என்று புகழப்படும் மும்பை பேட்டிங் ஆர்டரே இதனால் இன்று கொஞ்சம் ஆடிப்போனது.

ஆடிப்போனது

ஆடிப்போனது

இன்று இயான் மோர்கன் செய்த முக்கியமான சம்பவம் என்றால், அவர் ஸ்பின் பவுலர்களை எப்படி பயன்படுத்தினார் என்பதுதான். முதல் 5 ஓவரிலேயே ஸ்பின் பவுலர்களை மட்டுமே பயன்படுத்தினார். வருண், ஷாகிப், ஹர்பஜன் ஆகியோரை மாற்றி மாற்றி ஓவர் போட வைத்தார். இதை மும்பை எதிர்பார்க்கவில்லை.

பாஸ்ட் பவுலர்கள்

பாஸ்ட் பவுலர்கள்

இன்னொரு பக்கம் பாஸ்ட் பவுலர்கள் யாரும் புல் லென்த் பவுலிங் செய்யவில்லை. புல் லென்தில் பவுலிங் செய்தால் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அடிப்பார்கள், என்பதால், திட்டமிட்டு அந்த லென்தை மட்டும் தவிர்த்து, மற்றபடி உடலை நோக்கி வீசினார். அதிலும் இஷான் கிஷானுக்கு கும்மின்ஸ் வகுத்த பவுலிங் பிளான் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

உயரம்

உயரம்

இஷான் கிஷான் பேட்டிங் வந்ததும் அவருக்கு ஸ்லோ ஷார்ட் பால் போடப்பட்டது. லெக் ஸ்டம்ப் பக்கம் போடப்பட்டு, அதற்கு ஏற்றபடி டீப், ஸ்கோயர் திசைகளில் மட்டுமே பீல்டர்கள் அதிகம் நிற்க வைக்கப்பட்டனர். இஷான் கிஷானுக்கு வலை விரிக்கும் வகையில் டிராப் அமைத்து, இயான் மோர்கன் பீல்டர்களை நிற்க வைத்து இருந்தார்.

சிறப்பு

சிறப்பு

இவருக்கு மட்டுமின்றி மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் இதே போன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டு இருந்தது. அதிலும் வருண் சக்ரவர்த்தி, கும்மின்ஸ் இருவரையும் இன்று இயான் மோர்கன் பயன்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. முமையில் இன்று சூர்யா குமார் யாதவ் மட்டுமே 56 ரன்கள் எடுத்தார்.

திணறல்

திணறல்

ரோஹித் 43 ரன்கள் எடுத்தாலும் கூட பெரிய அளவில் ஷாட் அடிக்க முடியாமல் தினாறினார். எப்போதும் அசால்ட்டாக ஆடும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களே இன்று பிரஷர் ஆகி சொதப்ப தொடங்கினார்கள். பவுலிங் ரொட்டேஷன் தொடங்கி பீல்டிங் வரை இன்று இயான் மோர்கனின் கேப்டன்சி மிக சிறப்பாக இருந்தது.

Story first published: Tuesday, April 13, 2021, 20:55 [IST]
Other articles published on Apr 13, 2021
English summary
IPL 2021: Eoin Morgan plan with bowlers and fielders is excellent against the Mumbai Indians
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X