For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஸல், பேட் கம்மின்ஸ் போராட்டம் தோல்வி.. இறுதிவரை பரபரப்பு.. சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி

மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-ல் இறுதி ஓவர் வரை செல்லும் பரபரப்பு போட்டிகளுக்கு பஞ்சமே கிடையாது. அந்த வகையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பரபரப்பு கட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ப்பா.. இப்படி ஒரு கம்பேக்கா... அனைவரையும் வியக்கவைத்த ருத்ராஜ் கெயிக்வாட்.. தோனியின் ப்ளான் சக்சஸ்! ப்பா.. இப்படி ஒரு கம்பேக்கா... அனைவரையும் வியக்கவைத்த ருத்ராஜ் கெயிக்வாட்.. தோனியின் ப்ளான் சக்சஸ்!

சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

கடந்த 3 போட்டிகளிலும் சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் சொதப்பி வந்த நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக அமைந்தது. ருத்ராஜ் கெயிக்வாட் மற்றும் டுப்ளசிஸ் இணைந்து ஆட்டத்தின் தொடக்கம் முதலே கொல்கத்தா அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இதனால் பவர் ப்ளே ஓவரின் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்தது.

மொயின் அலி

மொயின் அலி

இதன் பின்னரும் இந்த ஜோடியை கொல்கத்தா அணியால் பிரிக்க முடியாமல் திணறி வந்தது. அதிரடியாக ஆடி வந்த ருத்ராஜ் கெயிக்வாட் 42 பந்துகளில் 64 ரன்களை விளாசி அவுட்டானார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 115 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் வந்த மொயின் அலி 12 பந்துகளில் 25 ரன்களை விளாசி தன் பணியை சிறப்பாக செய்தார்.

தோனி

தோனி

இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி 8 பந்துகளில் 17 ரன்களை சேர்த்தார். நீண்ட நாட்களாக தோனியின் அதிரடியை காண முடியாமல் இருந்த ரசிகர்கள் இந்த போட்டியில் அவரின் சிக்ஸரை கண்டனர். மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய டுப்ளசிஸ் சென்னை அணியின் ஸ்கோரை மலமலவென உயர்த்தினார்.

இலக்கு

இலக்கு

இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய டுப்ளசிஸ் 60 பந்துகளில் 95 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் இதுவரை ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள கொல்கத்தா அணி 221 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது.

திடீர் அதிரடி

திடீர் அதிரடி

பின்னர் ஜோடி சேர்ந்த ஆண்ட்ரே ரஸல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடி காட்டிய ரஸல் 22 பந்துகளில் 55 ரன்களை விளாசினார். இதில் 6 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். அதே போல தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 40 ரன்களை எடுத்து வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய பேட் கம்மின்ஸ் ரஸல் விட்ட அதிரடியை தொடர்ந்தார்.

அபார வெற்றி

அபார வெற்றி

அதிரடி காட்டிய அவர் 34 பந்துகளில் 66 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும் கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 202 ரன்களே எடுத்தது. இதனால் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, April 21, 2021, 23:35 [IST]
Other articles published on Apr 21, 2021
English summary
Faf du Plessis's unbeaten 95 boost Chennai to 220/3 against KKR
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X