For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரை எப்படி ஓரம்கட்டலாம்.. இவ்வளவு ஈகோவா?.. வார்னர் எடுத்த முடிவால் கொதிக்கும் பேன்ஸ்.. பரபரப்பு!

சென்னை: கொல்கத்தாவிற்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் ஹைதராபாத் கேப்டன் வார்னரின் அணி தேர்வு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. சேப்பாக்கத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

கொல்கத்தா அணிக்காக ஓப்பனிங் இறங்கிய ராணா - சுப்மான் கில் இருவரும் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடி வருகிறார்கள். ரன் ரேட் வேகமாக உயர்ந்து வருகிறது.

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தாவிற்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக அப்துல் சமாத் இடம்பெற்றுள்ளார். அதேபோல் இன்னொரு வெளிநாட்டு வீரராக முகமது நபி இடம்பெற்றுள்ளார்.

வில்லியம்சன்

வில்லியம்சன்

கேன் வில்லியம்சன் கடந்த முறையும் இதேபோல்தான் ஹைதரபாத் அணியால் ஓரம் கட்டப்பட்டார். கடந்த வருடம் தொடக்கத்தில் சில போட்டிகளில் வில்லியம்சனுக்கு வார்னர் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவருக்கு பதிலாக நபியை வார்னர் அணியில் எடுத்தார்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

வில்லியம்சன் இல்லாமல் ஹைதராபாத் அணி தொடர்ந்து தோல்வி அடைந்தது. அதன்பின் வில்லியம்சன் அணிக்குள் வந்த பின்தான் ஹைதராபாத் அணி வெல்ல தொடங்கியது. இந்த நிலையில் இந்த வருடமும் கேன் வில்லியம்சனை வார்னர் புறக்கணிக்க தொடங்கி உள்ளார்.

மோசம்

மோசம்

நபி அல்லது சமாத்திற்கு பதிலாக வில்லியம்சனை வார்னர் எடுத்து இருக்கலாம். அல்லது பிரைஸ்டோவிற்கு பதிலாக வில்லியம்சனை எடுத்து இருக்கலாம். ஆனால் வார்னர் வேன்றுமென்றே சிறந்த டி 20 வீரரான வில்லியம்சனை ஓரம் காட்டியுள்ளார்.

ஈகோ

ஈகோ

வில்லியம்சன் மீது வார்னருக்கு ஈகோ பிரச்சனை. அதனால்தான் அவரை எடுப்பது இல்லை. இது தவறு. அவரை ஹைதராபாத் அணி சரியாக பயன்படுத்துவது இல்லை. அவரை உடனடியாக வேறு அணிக்கு டிரேட் செய்ய வேண்டும் என்று கேன் வில்லியம்சன் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Story first published: Sunday, April 11, 2021, 20:01 [IST]
Other articles published on Apr 11, 2021
English summary
IPL 2021: Fans are not happy with the removal of Kane Williamson in Hydrabad against Kolkata
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X