For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரை எடுத்துவிட்டு.. நடராஜனை தூக்கியது ஏன்? தமிழருக்காக கொதித்த வடஇந்தியர்கள்.. வார்னருக்கு சிக்கல்!

சென்னை: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் நடராஜன் எடுக்கப்படாததற்கு வட இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மும்பைக்கும் ஹைதராபாத்திற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது.

பவர் பிளேவை பயன்படுத்தி மும்பையின் டாப் ஆர்டர் வீரர்கள் அடித்து துவைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஹைதராபாத் அணியின் பவுலிங் அவ்வளவு சிறப்பாக இல்லை.

நடராஜன்

நடராஜன்

இந்த போட்டியில் ஹைதராபாத் அணியில் நடராஜன் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக கலீல் அகமது எடுக்கப்பட்டுள்ளார். நடராஜன் கடந்த போட்டிகளில் நன்றாக ஆடியும் கூட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

வார்னர்

வார்னரின் இந்த முடிவை வடஇந்தியர்கள் பலரும் டிவிட்டரில் விமர்சித்து வருகிறார்கள். நடராஜன்தான் டெத் ஓவரில் நன்றாக வீசுவார். அவரை நீக்கியது ஏன்? விஜய் சங்கருக்கு வாய்ப்பு கொடுக்கும் போது நடராஜனை நீக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

கலீல் அகமது

கலீல் அகமது கடந்த இரண்டு வருடமாக சரியாக ஆடவில்லை. சையது முஷ்டாக் கோப்பையில் கூட சரியாக ஆடவில்லை. அப்படி இருக்கும் போது இவருக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். வார்னரின் முடிவை பலர் விமர்சித்துள்ளனர்.

நடராஜன் தேர்வு

நடராஜனை நீக்கப்பட்டதை பற்றி மட்டுமின்றி வில்லியம்சன், ஹோல்டர் அணியில் எடுக்கப்படாதது குறித்தும் விமர்சித்துள்ளனர். மிடில் ஆர்டர் மோசமாக இருந்தும் கூட ஹைதராபாத் அணியில் கடந்த மூன்று போட்டிகளாக வில்லியம்சன் எடுக்கப்படவில்லை. அதேபோல் கடந்த போட்டியில் நன்றாக ஆடிய ஹோல்டர் எடுக்கப்படவில்லை.

மோசம்

மோசம்

டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடி வரும் மணீஷ் பாண்டேவுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் வடஇந்தியர்கள் மற்றும் ஹைதரபாத் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். வார்னரின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

Story first published: Saturday, April 17, 2021, 20:31 [IST]
Other articles published on Apr 17, 2021
English summary
IPL 2021: Fans do not like the decision of Warner to bench Natarajan in SRH against Mumbai Indians.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X