For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தெறித்த ஸ்டம்ப்.. வாயை பிளந்த தோனி, ரெய்னா.. சிஎஸ்கேவை கலங்கடித்த 20 வயசு புலி.. யாருங்க இவர்?!

சென்னை: சிஎஸ்கே அணியின் பயிற்சி ஆட்டங்களில் இளம் வீரர் ஒருவர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். மூத்த வீரர்களை 20 வயதே ஆன ஆப்கான் வீரர் ஒருவர் கலங்கடித்துக்கொண்டு இருக்கிறார்.

ஐபிஎல் 2021 தொடருக்காக சிஎஸ்கே அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மும்பையில் சிஎஸ்கே அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

 குழப்பத்தில் விராட் கோலி.தேவ்தத் பட்டிக்கலின் இடத்தை நிரப்ப வாய்ப்பிருக்கும் 3 வீரர்கள்.பலம் என்ன? குழப்பத்தில் விராட் கோலி.தேவ்தத் பட்டிக்கலின் இடத்தை நிரப்ப வாய்ப்பிருக்கும் 3 வீரர்கள்.பலம் என்ன?

கடந்த ஒரு மாதமாக இவர்கள் மும்பையில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். வலைப்பயிற்சியோடு சேர்த்து பயிற்சி ஆட்டங்களையும் ஆடி வருகிறார்கள்.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சி ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் வீரர் பசல்ஹாக் ஃபருக்கி மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். சிஎஸ்கே அணியில் இவர் நெட் பயிற்சி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த இவர் பெரிய அளவில் சர்வதேச போட்டிகளில் ஆடியது இல்லை.

சர்வதேச போட்டிகள்

சர்வதேச போட்டிகள்

ஆனால் ஆப்கானிஸ்தானின் முதல் தரப்போட்டிகளிலும், பல லீக் போட்டிகளிலும் பசல்ஹாக் சிறப்பாக ஆடி இருக்கிறார். இவரின் சிறப்பான பவுலிங் காரணமாக ஈர்க்கப்பட்ட தோனி, தற்போது வலைப்பயிற்சியில் பவுலிங் செய்ய வேண்டும் என்று இவரை அணியில் எடுத்துள்ளார். வலைப்பயிற்சியில் பசல்ஹாக் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறாராம்.

எப்படி

எப்படி

இதுவரை நடந்த பயிற்சி ஆட்டங்களில் பசல்ஹாக் பலமுறை ரெய்னா, தோனியின் விக்கெட்டை எடுத்துள்ளார். வைட் யார்க்கார், ஸ்லோ பவுன்சர் மூலம் இரண்டு பேரையும் பசல்ஹாக் திக்குமுக்காட செய்துள்ளார். ஷார்ட் பந்து போட்டால் லெக் சைடில் ஆட முடியாமல் ரெய்னா திணறுவார். இதனால் அவருக்கு அதேபோன்ற பந்துகளை பசல்ஹாக் வீசியுள்ளார்.

பசல்ஹாக்

பசல்ஹாக்

ரெய்னா, தோனி விக்கெட்டை அடுத்தடுத்து எடுத்து பசல்ஹாக் அசத்தி உள்ளார். இவரின் பவுலிங்கை பார்த்து சென்னை அணி நிர்வாகம் பெரிய அளவில் இம்ப்ரஸ் ஆகியுள்ளது. இவருக்கு விரைவில் அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.

ஹஸல்வுட்

ஹஸல்வுட்

சென்னை அணியில் இருந்து ஹஸல்வுட் வெளியேறிவிட்டார். இவருக்கு பதிலாக மாற்று வெளிநாட்டு வீரரை சென்னை அணி தேர்வு செய்ய வேண்டும். இந்த இடத்தை பசல்ஹாக்கை சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

Story first published: Thursday, April 8, 2021, 12:35 [IST]
Other articles published on Apr 8, 2021
English summary
IPL 2021: Fazalhaq Farooqi bowls very well in practice matches of CSK in Mumbai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X