For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னைக்கு பெரும் சிக்கல்.. கே.கே.ஆருக்கு திரும்பும் அதிரடி வீரர்.. இரு அணிகளின் பிளெயிங் லெவன்!

துபாய்: ஐ.பி.எல் 2021 தொடரின் இறுதி போட்டியில் இன்று 3 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 2 முறை சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு தரமான சம்பவம் காத்திருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது, ஆனால் அடுத்த 5 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றது. இந்தியாவில் விளையாடிய 7 ஆட்டங்களில் 5-ல் வென்று புள்ளிபட்டியலில் இரண்டாம் இடம் பிடித் து கடைசியில் டெல்லியை வீழ்த்தி பைனலுக்கு வந்துள்ளது.

சென்னை vs கொல்கத்தா.. செம்மையான பைனல்.. பலம் என்ன?.. பலவீனம் என்ன?.. ஓர் அலசல்!சென்னை vs கொல்கத்தா.. செம்மையான பைனல்.. பலம் என்ன?.. பலவீனம் என்ன?.. ஓர் அலசல்!

 ருதுராஜ் கெய்க்வாட் அசத்தல்

ருதுராஜ் கெய்க்வாட் அசத்தல்

சி.எஸ்,கே.வின் தொடக்க ஜோடியான ருதுராஜ் கெய்க்வாட(15 இன்னிங்ஸில் 603 ரன்கள்), டு பிளெஸிஸ்(15 இன்னிங்ஸில் 547 ரன்கள்) கம்பீரமாக நிற்கின்றனர். பந்துவீச்சில ஷர்துல் தாக்கூர் இதுவரை 18 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். ஜோஷ் ஹேசல்வுட் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்.

 இந்திய இளம் வீரர்கள்

இந்திய இளம் வீரர்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸைப் பொறுத்தவரை இந்தியாவில் நடந்த முதல் 7 ஆட்டங்களில் 5 ல் தோல்வியடைந்து புள்ளிபட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் இருந்தனர். ஆனால் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் 7 ஆட்டங்களில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்துள்ளனர். வெங்கடேஷ் ஐயர், ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி, சிவம் மாவி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இந்திய இளம் வீரர்கள் அசத்தி வருகின்றனர்.

 ராபின் உத்தப்பாவுக்குதான் இடம்

ராபின் உத்தப்பாவுக்குதான் இடம்

சென்னை அணியின் பிளெயிங் லெவனை பொறுத்தவரை தொடர்ந்து சொதப்பி வெளியேற்றப்பட்ட ரெய்னாவுக்கு பதில் இடம் பெற்ற ராபின் உத்தப்பா கடந்த முக்கியமான போட்டியில் மேட்ச் வின்னராக ஜொலித்தார். இதனால் ரெய்னாவுக்கு இடம் கிடைக்காது. மற்றபடி வேறு எந்த மாற்றமும் இருக்காது. கொல்கத்தா அணியில் காயத்தில் இருந்து குணமடைந்த ஆல்ரவுண்டர் ரசல் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஷகிப் அல் ஹாசனும் நன்றாக ஆடி வருவதால் யாரை சேர்ப்பது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

 பிளெயிங் லெவன் இதுதான்

பிளெயிங் லெவன் இதுதான்

சென்னை-கொல்கத்தா அணிகளின் பிளெயிங் லெவன் பின்வருமாறு:-

சென்னை பிளெயிங் லெவன்:- ருதுராஜ் கெய்க்வாட், பாஃப் டு பிளெஸிஸ், மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, எம்எஸ் தோனி(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்

கொல்கத்தா பிளெயிங் லெவன்:- சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன் அல்லது ஆந்த்ரே ரசல், சுனில் நரைன், சிவம் மாவி, லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி

Story first published: Friday, October 15, 2021, 18:33 [IST]
Other articles published on Oct 15, 2021
English summary
All-rounder Russell, who has recovered from injury in the Kolkata squad, has a chance to return. Three-time champions Chennai Super Kings and two-time champions Kolkata Knight Riders clash in the final of the IPL 2021 series today
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X