ஐபிஎல்: இறுதிப்போட்டியில் இந்த 2 அணிகள் தான்.. அடித்துக் கூறும் ஆகாஷ் சோப்ரா..உற்சாகத்தில் ரசிகர்கள்

மும்பை: இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறவிருக்கும் 2 அணிகள் குறித்து ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் செப்டம்பர் 19ம் முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஐபிஎல்: 3 இங்கிலாந்து வீரர்கள் திடீர் விலகல்.. இந்திய வீரர்கள் மீதான கோபம்.. அதிர்ச்சியில் அணிகள்! ஐபிஎல்: 3 இங்கிலாந்து வீரர்கள் திடீர் விலகல்.. இந்திய வீரர்கள் மீதான கோபம்.. அதிர்ச்சியில் அணிகள்!

இதற்கான ஏற்பாடுகளில் அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. பிசிசிஐ-ம் இறுதிகட்ட ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

 ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒருவார காலமே இருப்பதால், அனைத்து அணிகளும் அமீரகத்திற்கு சென்றுவிட்டன. அயல்நாட்டு வீரர்களும் அணி பபுளுடன் இணைந்து வருகின்றனர். இந்த தொடரின் முதல் ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் பரம எதிரிகள் போன்று பார்க்கப்படுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இது ஒருபுறம் இருக்க இந்தாண்டு ஐபிஎல் தொடரில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்றும் யார் கோப்பையை வெல்வார்கள் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் பாதி வரை டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு அணிகள் போட்டிப்போட்டு வருகின்றன.

 புள்ளி விவரம்

புள்ளி விவரம்

இதில் டெல்லி அணி ராஜாவாக திகழ்ந்து வருகிறது. 6 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி 5 வெற்றிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 4 வெற்றிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

நிலவும் போட்டிகள்

நிலவும் போட்டிகள்

சிஎஸ்கே அணி கம்பேக் கொடுத்து அசுரத்தனமான ஃபார்மில் உள்ளது. கடந்தாண்டு இறுதிப்போட்டி வரை சென்று ஏமாந்த டெல்லி அணி இந்தாண்டு தீவிரமாக உள்ளது. ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வெல்லவும், மும்பை இந்தியன்ஸ் அணி 6வது முறையாக கோப்பையை வெல்லவும் முனைப்பு காட்டி வருகின்றன.

 சோப்ராவின் கருத்து

சோப்ராவின் கருத்து

இந்நிலையில் இந்தாண்டு இறுதிப்போட்டியில் எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகிறது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இறுதிப்போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் எனத் தெரிவித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Former Cricketer Aakash Chopra predicts the finalists of this season IPL
Story first published: Tuesday, September 14, 2021, 18:19 [IST]
Other articles published on Sep 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X