For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவ்ளோ கவனக்குறைவா.. கொல்கத்தா அணி மீது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கடும் அதிருப்தி.. செய்த தவறு என்ன?

சென்னை: மும்பை இந்தியன்ஸிடம் கொல்கத்தா அணி அடைந்த மோசமான தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் தாக்கியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த கொல்கத்தா அணி கோட்டைவிட்டது.

தடுமாறிய தருணம்.. ரோஹித் சொன்ன வார்த்தைகள் ; அதுதாங்க கேப்டன்சி மந்திரம்.. ராகுல் சாஹர் புகழாரம் தடுமாறிய தருணம்.. ரோஹித் சொன்ன வார்த்தைகள் ; அதுதாங்க கேப்டன்சி மந்திரம்.. ராகுல் சாஹர் புகழாரம்

இவ்வளவு மோசமாக ஒரு போட்டியில் தோற்பதா? என ரசிகர்கள் முன்னாள் வீரர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

கொல்கத்தா அணி தவறு

கொல்கத்தா அணி தவறு

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 7 விக்கெட்களை மட்டுமே இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து ல்வியடைந்தது. கடைசி கட்டத்தில் கொல்கத்தா அணி செய்த பெரிய தவறே இதற்கு காரணமாக அமைந்தது.

ஸ்பின்னரிடம் திணறல்

ஸ்பின்னரிடம் திணறல்

கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிதிஷ் ராணா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். கடைசி 10 ஓவர்களில் அந்த அணிக்கு 72 ரன்கள்தான் தேவைப்பட்டது. எனினும் அந்த அணியால் 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி வீரர் ராகுல் சஹாரின் சுழலில் சிக்கி திணறியது.

லாரா சாடல்

லாரா சாடல்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிரைன் லாரா, தொடக்கம் சரியாக அமைந்துள்ளது, நாம் சென்று ஆட்டத்தை முடிப்போம் என இருக்க கூடாது. கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். எதிரணியில் எந்த ஸ்பின்னர் தலைவலி ஏற்படுத்தக்கூடியவர் என பார்த்திருக்க வேண்டும். ஒரு லெக் ஸ்பின்னர் ஒரு இடதுகை பேட்ஸ்மேனை விக்கெட் எடுப்பது வழக்கம் தான். ஆனால் ராகுல் சஹார் அனைவரையும் வெளியேற்றினார். இதற்கு காரணம் கொல்கத்தா பேட்ஸ்மேன் மிக கவனக்குறைவுடன் ஆடியதுதான்.

பரிசீலனை செய்ய வேண்டும்

பரிசீலனை செய்ய வேண்டும்

நேற்றைய போட்டியில் பிரஷர் அதிகம் இருந்தது. சென்னை பிட்ச்சானது வீரர்கள் வந்தவுடன் அதிரடி காட்டும் பிட்ச் கிடையாது. சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். 145 ரன்கள்தான் என்பது சென்னை பிட்ச்சில் சராசரியான ரன்னாகும். எனவே அதனை கொல்கத்தா சிந்திந்து பார்த்து மாற்ற வேண்டும்.

Story first published: Wednesday, April 14, 2021, 17:14 [IST]
Other articles published on Apr 14, 2021
English summary
Former Cricketer Brian Lara unimpressed with KKR's batting collapse against MI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X