For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பஞ்சாப் அணி இதை செய்தே ஆக வேண்டும்.. சீனியர் வீரருக்கு சப்போர்ட் கொடுக்கும் கம்பீர்..ஏன் இந்த முடிவு

சென்னை: இந்த ஐபிஎல்-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓப்பனிங்கில் முக்கிய மாற்றம் செய்ய வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் கடந்த ஆண்டு முதல் ஓப்பனிங்கில் கிறிஸ் கெயில் இறக்கப்படுவதில்லை. அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் களமிறங்கி வருகிறார்.

இனி இவர் தேறமாட்டார்... மீண்டும் மீண்டும் சொதப்பும் இளம் வீரர்.. கோபத்தில் முன்னாள் வீரர்கள்இனி இவர் தேறமாட்டார்... மீண்டும் மீண்டும் சொதப்பும் இளம் வீரர்.. கோபத்தில் முன்னாள் வீரர்கள்

ஓப்பனிங் இல்லை

ஓப்பனிங் இல்லை

வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிறிஸ் கெயில் பஞ்சாப் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டி வந்தார். ஆனால் கடந்த ஆண்டு முதல் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கி வருகிறது. இதனால் 3வது வீரராக களமிறங்கும் கெயில் சரியான பொஷிஷன் இல்லாமல் தடுமாறுகிறார். இந்த சீசனிலும் 3வது வீரராகவே விளையாடி வருகிறார்.

கெயில் தடுமாற்றம்

கெயில் தடுமாற்றம்

இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் முதல் போட்டியில் மட்டும் கெயில் ஆர்சிபிக்கு எதிராக 40 ரன்கள் அடித்தார், ஆனால் அதற்கு அடுத்த போட்டிகளில் 10,11,15 ரன்களையே அடித்துள்ளார். தொடக்க ஜோடியும் முதல் போட்டியை தவிர்த்து வேறு போட்டிகளில் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை. இந்நிலையில் இன்றைய போட்டி முதல் கிறிஸ் கெயில் ஓப்பனிங் களமிறக்கப்பட வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கம்பீர்

கம்பீர்

பஞ்சாப் அணியில் உலகின் நம்.1 டி20 பேட்ஸ்மேன் டேவிட் மாலன் உள்ளார். எனினும் அவரை விட கெயில் தான் ஓப்பனிங்கிற்கு தேவை என கம்பீர் தெரிவித்துள்ள்ளார். இதுகுறித்து பேசிய அவர், டேவிட் மாலன் நம்.1 வீரராக இருக்கலாம், ஆனால் மைதானத்தின் கள சூழலை வைத்து பார்த்தால் கெயில் தான் தேவை. ஒரு வேளை கெயிலை 3வது வீரராக களமிறக்கினால் அவர் நிச்சயம் தடுமாறுவார். இதனை அவரது முந்தைய ஆட்டங்களில் பார்க்கிறோம். எனவே கெயில் ப்ளேயிங் 11ல் இடம்பெற்றால் ஓப்பனிங் தான் இறங்கவேண்டும்.

நிறுத்த முடியாது

நிறுத்த முடியாது

பஞ்சாப் அணி இதற்கு முன்னர் ஆடிய மும்பை மைதானத்தில் கிறிஸ் கெயில் ஓப்பனிங் இறங்கியிருந்தால் 60 பந்துகளில் சதமடித்திருப்பார். அதே போல தான் சென்னை களத்திலும் முதல் 6 ஓவர்கள் முக்கியமானவை. முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை குவித்துக்கொள்ள வேண்டும். அதற்கு கெயிலை விட்டால் வேறு யாரால் முடியும். அவர் 7வது ஓவர் வரை நின்றுவிட்டால், அவரிடம் நீங்கள் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய கூற முடியாது. ஏனென்றால் 7வது ஓவர் வரை நின்றுவிட்டால் அவர் அதிரடி காட்டிவிடுவார் என தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 23, 2021, 17:31 [IST]
Other articles published on Apr 23, 2021
English summary
Gautam Gambhir Advice Punjab kings to change the opening pair in this Season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X