For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி அப்படி செஞ்சா கேப்டன்சி கிடையாது.. தோனிக்கு கவுதம் கம்பீர் எச்சரிக்கை.. இன்றைய போட்டி நிலவரம்

மும்பை: சென்னை அணி கேப்டன் எம்.எஸ். தோனியின் கேப்டன்சி குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் குறை கூறியுள்ளார்.

Recommended Video

தல MS Dhoni புதிய சாதனை | முதல் வெற்றிக்கு போராடும் CSK

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் மீண்டு வரவேண்டும் என சென்னை அணி படு தீவிரமாக தயாராகி வருகிறது.

ஐபிஎல்லுல எதிரணின்னா அது மும்பை இந்தியன்ஸ்தான்... சிறப்பான டீம்... முன்னாள் சிஎஸ்கே வீரர் பாராட்டுஐபிஎல்லுல எதிரணின்னா அது மும்பை இந்தியன்ஸ்தான்... சிறப்பான டீம்... முன்னாள் சிஎஸ்கே வீரர் பாராட்டு

மீண்டும் தோல்வி

மீண்டும் தோல்வி

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் படு தோல்வியை சந்தித்து வெளியேறிய சென்னை அணி இந்தாண்டு தொடக்கம் முதலே அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. டெல்லி அணியுடன் மோதி அப்போட்டியில் சிஎஸ்கே 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

 ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

இந்த போட்டியில் அனைவரும் எதிர்பார்த்திருந்த சின்ன தல சுரேஷ் ரெய்னா அரை சதம் அடித்து மகிழ்வித்த போதும் கேப்டன் தோனி ஏமற்றமளித்தார். அணி சரிவில் இருந்த போது பொறுப்புடன் ஆட வேண்டிய தோனி, டக் அவுட்டாகி வெளியேறினார். சென்னை பிட்ச் புதிதாக களமிறங்கும் வீரர்களுக்கு சற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதனால் வழக்கமாக நிதானமான ஆட்டத்தை முதலில் வெளிப்படுத்தும் தோனி எடுத்தவுடனேயே அதிரடியாக ஆட முற்பட்டு அவுட்டானார். இதற்கு காரணம் அவர் கடைசியாக களமிறங்கியது தான்.

பேட்டிங் பொஷிசன்

பேட்டிங் பொஷிசன்

கேப்டன் தோனி கடந்த சீசனில் இருந்தே பேட்டிங்கில் 7வது இடத்தில் தான் களமிறங்கி விளையாடி வருகிறார். அதைபோல் கடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் 7 வது இடத்தில் இறங்கி டக் அவுட் ஆகி வெளியேரினார். இதற்காக பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அந்தவகையில் கவுதம் கம்பீரும் தனது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

கேப்டன் பதவி

கேப்டன் பதவி

இதுகுறித்து பேசிய கம்பீர், கேப்டன் தோனி 7 வது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்தால் சிஎஸ்கேவை வழிநடத்த முடியாது. எனவே அனைவரும் அறிவுறுத்துவதை போலவே வரவிருக்கும் போட்டிகளில் 4 அல்லது 5 என்ற இடத்தில் பேட் செய்ய வேண்டும். பந்துவீச்சில் சிறிய பிர்ச்சினைகள் உள்ளது தான். எனினும் அணியின் கேப்டன் முன்னர் களமிறங்கி வீரர்களூக்கு நம்பிக்கை தரவேண்டும்.

வழக்க முறை

வழக்க முறை

4 - 5 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பார்த்த எம் எஸ் தோனி தற்போது இல்லை. பழைய தோனியை பார்க்கமுடியவில்லை. எனவே வரவிருக்கும் போட்டிகளில் தோனி 4 - 5 வீரராக களிமிறங்க வேண்டும். 5க்கும் அடுத்த இடங்களில் தோனி ஆடி அணியை வழிநடத்த வேண்டும். எனவே இன்று நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் என்ன மாற்றம் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Friday, April 16, 2021, 23:55 [IST]
Other articles published on Apr 16, 2021
English summary
Gautam Gambhir suggests batting position for MS Dhoni
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X