For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே வாரத்தில் சொதப்பிய "யார்க்கர்" பவுலர்.. விளாசும் பேட்ஸ்மேன்கள்.. இவர் போய் நடராஜனுக்கு மாற்றா?

சென்னை: நடராஜனுக்கு மாற்றாக வரலாம் என்று கருதப்பட்ட ஆர்சிபி பவுலர் ஒருவர் மிக மோசமாக சொதப்பி வருகிறார்.

2021 ஐபிஎல் தொடர் தமிழக வீரர் நடராஜனுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் ஆடிய நடராஜன் அதன்பின் காயம் காரணமாக ஓய்வு எடுத்தார்.

அந்த 11 பேர் யார்? நம்பிக்கையோடு களமிறங்கும் தோனி.. மும்பைக்கு எதிரான முக்கியமான கேம்.. முழு விபரம் அந்த 11 பேர் யார்? நம்பிக்கையோடு களமிறங்கும் தோனி.. மும்பைக்கு எதிரான முக்கியமான கேம்.. முழு விபரம்

தற்போது இவருக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த தொடரில் இவர் மேலும் ஆடுவது சந்தேகம் ஆகியுள்ளது.

 ஹர்ஷல் பட்டேல்

ஹர்ஷல் பட்டேல்

இந்த தொடரில் இன்னொரு பக்கம் பெங்களூர் அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் கவனம் ஈர்த்தார். தொடரின் தொடக்கத்தில் இவர் ஆர்சிபி அணிக்கு சிறப்பாக பவுலிங் செய்தார். முக்கியமாக டெத் ஓவர்களில் ஹர்ஷல் பட்டேல் கவனம் ஈர்த்தார்.

டெத் ஓவர்கள்

டெத் ஓவர்கள்

டெத் ஓவர்களில் ஸ்லோ பால் வீசுவது, யார்க்கர் வீசுவது என்று நன்றாகவே ஆடினார். இதனால் ஒருவேளை இவர் நடராஜனுக்கு மாற்றாக வருவாரோ என்று கேள்விகள் எழுந்தன. நடராஜன் காயத்தில் இருப்பதால் இந்திய அணியில் ஹர்ஷல் பட்டேல் இடம்பெறுவாரோ என்று கேள்விகள் எழுந்தன. அதோடு கோலிக்கும் இவர் நெருக்கமாக இருக்கிறார்.

நெருக்கம்

நெருக்கம்

ஆனால் இவரின் யார்க்கர் கணிக்கும் வகையிலேயே இருந்தது. முக்கியமாக இவரின் ஸ்லோ பால் அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த நிலையில் முதலில் நன்றாக பவுலிங் செய்த ஹர்ஷல் தற்போது சொதப்ப தொடங்கி உள்ளார். பேட்ஸ்மேன்கள் இவரை எளிதாக கணித்து ஆட தொடங்கி உள்ளனர். முக்கியமாக இவரின் டெத் ஓவர் பவுலிங்கை எளிதாக அடிக்க தொடங்கி உள்னனர்.

கணிப்பு

கணிப்பு

இவரின் ஓவரில்தான் ஜடேஜா 36 ரன்களை அடித்தார். அன்று ஆர்சிபி தோல்வி அடைய இவர்தான் முக்கிய காரணம். அதேபோல் நேற்றும் இவர் 4 ஓவர் வீசி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 53 ரன்கள் கொடுத்தார். நேற்று பெங்களூர் அணியில் அதிக ரன்கள் கொடுத்தது இவர்தான்.

எப்படி

எப்படி

வந்த புதிதில் இவரின் பவுலிங்கை கணிப்பது கஷ்டமாக இருந்தது. ஆனால் தற்போது இவரின் டெக்னிக் தெரிந்துவிட்டதால் எளிதாக ரன்களை கொடுக்கிறார். நீண்ட நாட்களுக்கு இவர் டெத் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்ய வாய்ப்பு இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூற தொடங்கி உள்ளனர்.

Story first published: Saturday, May 1, 2021, 11:52 [IST]
Other articles published on May 1, 2021
English summary
IPL 2021: Harshal Patel leaks runs in Death overs after a fine start in the season for RCB.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X