For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவிற்கு எதிராக "ரூல்ஸ்".. கப்புன்னு பிடிச்சு காலி செய்த கோலி.. கலக்கத்தில் தோனி.. பின்னணி!

சென்னை: 2021 ஐபிஎல் சீஸனின் ரூல்ஸ் ஒன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக திரும்பி உள்ளது. இதை பெங்களூர் அணி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு உள்ளது.

2021 ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக சென்னை, மும்பை, அஹமதாபாத், கொல்கத்தா போன்ற சில மைதானங்களில் மட்டுமே நடக்கிறது. இதில் எந்த அணிக்கும் அவர்களின் ஹோம் மைதானம் வழங்கப்படவில்லை.

இந்த ஒரு அரைசதத்துக்காக 5 வருஷம் காத்திருக்க வச்சுட்டீங்களே மேக்ஸ்வெல்... ஆர்சிபி நம்பிக்கை வீணாகல! இந்த ஒரு அரைசதத்துக்காக 5 வருஷம் காத்திருக்க வச்சுட்டீங்களே மேக்ஸ்வெல்... ஆர்சிபி நம்பிக்கை வீணாகல!

யாருமே அவர்களின் சொந்த மைதானத்தில் இந்த முறை ஆடவில்லை. மாறாக வெவ்வேறு மைதானங்களில் களமிறங்கி உள்ளனர்.

சென்னை

சென்னை

2021 ஐபிஎல் தொடரின் இந்த ரூல்ஸ்தான் சிஎஸ்கே அணிக்கு எதிராக திரும்பி உள்ளது. 2021 ஐபிஎல்லில் சென்னையில் ஆடலாம் என்ற நம்பிக்கையில் தோனி இருந்தார். சென்னை பிட்ச் ஸ்பின் பிட்ச் என்பதை மனதில் வைத்தே மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரை அணியில் எடுத்தார்.ஆனால் தற்போது சிஎஸ்கேவால் சென்னை மைதானத்தில் ஆடவே முடியவில்லை.

மும்பை

மும்பை

மும்பையில்தான் சிஎஸ்கே ஆடுகிறது. இந்த பிட்ச் முழுக்க முழுக்க பாஸ்ட் பவுலிங் - பேட்டிங் பிட்ச். இங்கு ஸ்பின் சுத்தமாக எடுபாடாது. இதுதான் அணிக்கு எதிராக திரும்பி உள்ளது. மும்பையில் இருக்கும் பும்ரா, போல்ட் போன்ற வீரர்கள் சென்னையில் கிடையாது. லுங்கி, பெஹன்டிராப் ஆகிய வீரர்கள் இன்னும் சிஎஸ்கேவில் இணையவில்லை.

திணறல்

திணறல்

இந்த பிட்ச் மாற்ற ரூல்ஸ் காரணமாக சிஎஸ்கே திணறி வருகிறது. ஆனால் கோலியோ இந்த விதியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளார். பெங்களூர் மைதானம் சின்னது மற்றும் பேட்டிங் பிட்ச் என்பதால் அங்கு பெங்களூர் பவுலர்கள் இவ்வளவு வருடம் சரியாக வீசியது இல்லை. ஆனால் இந்த முறை சென்னையில் பெங்களூர் ஆடுகிறது.

சாதகம்

சாதகம்

இந்த சேப்பாக்கம் பிட்சை கோலி சாதகமாக பயன்படுத்தி வருகிறார். பெங்களூர் அணியின் ஸ்பின் மற்றும் பாஸ்ட் பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்ய தொடங்கி உள்ளனர். மைதானம் மாறியதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பெங்களூர் அணி தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து வருகிறது.

வாவ்

வாவ்

எப்போதும் பெங்களூர் அணியில் பவுலிங்தான் சொதப்பும். ஆனால் இந்த முறை அந்த பவுலிங்கே பெங்களூர் அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. இதற்கு காரணம் சென்னை பிட்ச்தான். இந்த சீசனில் மைதானம் மாற்றப்பட்டது சென்னைக்கு எதிராகவும், பெங்களூருக்கு ஆதரவாகவும் மாறியுள்ளது.

Story first published: Thursday, April 15, 2021, 17:50 [IST]
Other articles published on Apr 15, 2021
English summary
IPL 2021: Home ground change not supporting CSK but helps RCB in big time
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X