For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"ஸ்மார்ட் இன்னிங்ஸ்".. ரோஹித்தின் பிளானை சுக்குநூறாக உடைத்த பண்ட்.. ஆடிப்போன மும்பை.. எப்படி?

மும்பை: மும்பை அணிக்கு எதிராக நேற்று டெல்லி அணியின் கேப்டன் பண்ட் வகுத்த திட்டங்கள் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. மும்பை அணியை டெல்லி வீழ்த்திய முறை மற்ற ஐபிஎல் அணிகளுக்கு பாடமாகி உள்ளது.

Recommended Video

DC LeftHand Batsmanளுக்கு 'செக்' வைத்த Mumbai Indians | Oneindia Tamil

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பைக்கும் டெல்லிக்கு இடையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. சேப்பாக்கத்தில் டாஸ் வென்றால் மும்பை அணி கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கே தேர்வு செய்கிறது.

சேப்பாக்கத்தில் சேசிங் செய்வது கடினம், போக போக பிட்ச் ஸ்பின் பிட்சாக மாறும் என்பதால் ரோஹித் சர்மா பேட்டிங்தான் தேர்வு செய்கிறார்.

பேட்டிங்

பேட்டிங்

இதில் மும்பை பேட்டிங் செய்து பொதுவாக 140-150 ரன்களை எடுக்கும். பின்னர் ஸ்பின் பவுலர்களை வைத்து மும்பை அணி 150 ரன்களை கூட டிஃபன்ட் செய்து வெற்றிபெறும். கொல்கத்தா, ஹைதாபாத் அணிகளை மும்பை அணி இப்படித்தான் சேப்பாக்கம் பிட்சில் வீழ்த்தியது. முக்கியமாக மிடில் ஓவர்களில் ஸ்பின் பவுலர்களை வைத்து மும்பை விக்கெட்டுகளை எடுக்கும்.

அனுமதிக்கவில்லை

அனுமதிக்கவில்லை

ஆனால் நேற்று மும்பையின் இந்த பிளானை டெல்லி கேப்டன் எளிதாக காலி செய்து விட்டார். மும்பை டாஸ் வென்று பேட்டிங் செய்தவுடன் முடிந்த அளவு அந்த அணியை குறைவான ரன்னில் சுருட்ட முடிவு செய்துவிட்டார். சென்னை பிட்ச் ஸ்பின் பிட்ச் என்பதால் அதை பயன்படுத்தி முழுக்க முழுக்க ஸ்பின் பவுலர்களை களமிறக்கி மும்பை அணிக்கு அழுத்தம் கொடுத்தார்.

அழுத்தம்

அழுத்தம்

முக்கியமாக அமித் மிஸ்ராவிற்கு இந்த பிட்சில் பவுலிங் செய்த அனுபவம் இருக்கிறது என்பதால், தொடர்ந்து அவரை பவுலிங் செய்ய வைத்தார். இங்குதான் மும்பை அணியின் பிளான் காலியானது. 150 அடித்ததால் தானே டிஃபன்ட் செய்வீர்கள் என்று முடிந்த அளவு 130க்குள் சுருட்ட பண்ட் நினைத்தார். அதற்கு ஏற்றபடி அமித் மிஸ்ராவும் 4 விக்கெட்டுகளை எடுத்து மும்பையை காலி செய்தார்.

எத்தனை

எத்தனை

மும்பை வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பண்ட் மீண்டும் ஸ்மார்ட் முடிவு எடுத்தார். ஸ்மித், தவான் இருவரையும் அடித்து ஆடி அவுட்டாக சொல்லாமல் நிதானமாக ஆட சொன்னார். இரண்டு பேருமே 100 ஸ்டிரைக் ரேட் வைத்தே ஆடினார்கள். அதோடு ஸ்மித் அவுட்டான பின் அதிரடி வீரர்களை இறக்காமல் லலித்தை இறக்கினார். இவர் நிதானமாக ஆட கூடியவர்.

ஸ்டிரைக்

ஸ்டிரைக்

இவர் வந்த பின் ஸ்டிரைக் ரொட்டேட் செய்து ரன் குறையாமல் அதே சமயம் விக்கெட்டும் விழாமல் பார்த்துக்கொண்டார். முன்பு கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் இப்படி செய்யவில்லை. அவசரப்பட்டு ஆடி அந்த அணிகள் தோல்வி அடைந்தன. ஆனால் பண்ட் அதற்கு இடம் கொடுக்காமல், பிளானை மாற்றி, லலித்தை முன்பே இறக்கிவிட்டு விக்கெட் விழுவதை கட்டுப்படுத்தினார்.

கேப்டன்

கேப்டன்

நேற்று பண்டின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது. இதனால்தான் வரிசையாக வென்று வந்த மும்பை நேற்று தோல்வி அடைந்தது. நேற்று பண்ட் புத்திசாலித்தனமாக எடுத்த முடிவுகளால் மும்பை அணி கொஞ்சம் களத்தில் ஆடிப்போய் இருந்தது.

Story first published: Wednesday, April 21, 2021, 8:41 [IST]
Other articles published on Apr 21, 2021
English summary
IPL 2021: How Delhi skipper Pant planned to face the Mumbai Indians bowling line up?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X